தற்கால நிகழ்வுகள்

  • பொங்கல் பரிசு வாங்கியாச்சா?
    பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம்… Read more: பொங்கல் பரிசு வாங்கியாச்சா?
  • பண முதலைகளிடம் உஷார்.
    பணம். இன்றைய நிலையில் உலகில் வாழும் அத்தனை ஆறறிவு மிருகங்கள் அனைவருக்கும் அடிப்படை நாதமே பணம் தான்.வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லாத குரங்கு இல்லை என்பதைப்போல, பணம் வேண்டாம், பணம் தேவையில்லை என்று சொல்லும் மனிதர்கள் இங்கு இல்லவே இல்லை என்பது தான் எழுதப்படாத உண்மை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மறதி வியாதி உள்ளவர்களும், 100 ல்0.00001 சதவீத வித்தியாசமான மனிதர்களைத் தவிர்த்து மீதி அனைவருமே பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடக்காரணம், உணவு , உடை… Read more: பண முதலைகளிடம் உஷார்.
  • பயனாளர்களே இது மரியாதையல்ல!
    இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது . அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள். சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர். இதை விளம்பரப்படுத்தி… Read more: பயனாளர்களே இது மரியாதையல்ல!
  • அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!
    அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிப்பதும், அங்கே நம்மால் சமாளிக்க முடியாது, நமக்கெல்லாம் அது சரியா வராது என்றும் இன்றளவிலும் பல மக்கள் மனிதில் ஆணித்தரமாக நம்புகின்றனர். இது உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது.அரசு மருத்துவமனைகளின் கடைநிலை ஊழியரில் துவங்கி ஒரு சில மருத்துவர்கள் வரை இப்படி மக்கள் நினைப்பதற்குக் காரணமாகவும் நடந்து கொள்ளத் தான் செய்கின்றனர். தான் அரசு வேலையில் இருப்பதால் ஒரு திமிரான நடைமுறை, ஓசியல மருத்துவம் பாக்க வந்த உனக்கென்ன மரியாதை என்ற… Read more: அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!
  • இப்படியும் ஏமாறலாமா?
    சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன. நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி… Read more: இப்படியும் ஏமாறலாமா?