Categories
சிறுகதை தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சிலர்!

உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம். நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன. ஆனாலும் அதையும் தாண்டி,நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம். நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல. நமது தினசரி பணத்தேடலில் , […]

Categories
அரசியல் சிறுகதை தற்கால நிகழ்வுகள்

அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!

ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார். அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன. அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று […]

Categories
கருத்து சிறுகதை தகவல் தற்கால நிகழ்வுகள்

சம வேலைக்கு சம ஊதியம்.

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார். அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு. ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து […]

Categories
சிறுகதை

துணிந்து செய்!- சிறுகதை

படித்ததில் பிடித்தது தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழிலதிபர் ஒரு காலத்தில் ஒரு பெரிய வைரத்தை வாங்கினார் – ஒரு முட்டையின் மஞ்சள் கரு அளவு. ஆனால் கல்லில் ஒரு விரிசல் ஓடுவதைக் கண்டுபிடித்தபோது அவரது உற்சாகம் விரைவில் ஏமாற்றமாக மாறியது. ஒரு தீர்வை எதிர்பார்த்து, அவர் அதை ஆலோசனைக்காக ஒரு நகைக்கடைக்காரரிடம் சென்றார். நகைக்கடைக்காரர் அந்த வைரத்தை கவனமாகப் ஆராய்ந்து, “இதை இரண்டு சரியான வைரங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றும் அசல் கல்லை விட அதிக மதிப்புள்ளவை. ஆனால் ஒரு […]

Categories
கருத்து சிறுகதை

ஆறறிவுள்ள மனிதராவோமா?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன கதை .தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள். இடம்: கோவில். நல்ல கூட்டமான கோவில். அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர். ஏங்க க்யூல வரக்கூடாதா , […]

Categories
கருத்து சிறுகதை தற்கால நிகழ்வுகள்

எது உண்மையான திறமை?

ஒரு சிறுகதை. ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது. அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார். கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார். நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து சிறுகதை

புத்தகத்தில் இல்லா பாடம்!

அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]

Categories
சிறுகதை

கணவர்களின் அவல நிலை.

படித்ததில் ரசித்தது! ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர் கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது! வையத்தியரும் சொன்னதில்லை! மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை! ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக் காணவில்லை. […]