சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பகிரப்பட்ட அந்தஎட்டு வயதுக் குழந்தை பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் சில கேள்விகள். தலைமை ஆசிரியரிடம்: ஐயா வணக்கம்.தாங்கள் அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் காலம் கழிக்கிறது, சரியாகப் படிக்கவில்லை என்று காரணம் சொல்லி அந்தக் குழந்தையைப் பள்ளியை விட்டு அனுப்பியதாகச் சொன்னீர்களே! இது எந்த விதியின் அடிப்படையில் செய்யப்பட்டது?எட்டு வயதுக் குழந்தை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், பள்ளியிலிருந்து அனுப்பலாம் என்று ஏதேனும் நடைமுறை உள்ளதா? மேலும் அந்தக் குழந்தையைப் பார்த்து மற்ற […]
Author: அருண் பாரதி
PMVBRY- EPFO- ஒரு தகவல்
PMVBRY- அதாவது EPFO ( Employees provident fund organisation ) ல் முதல்முறையாக இணையும் ஊழியர்களுக்கு ( இது அமைப்பு சாரா ஊழியர்களா? என்பதில் தெளிவில்லை) 15000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வந்தது. அதன்படி பலருக்கும் முதல் தவணையாக பாதி பணம் ரூ.7500 வரவு வைக்கப்பட்டது. மீதி 7500 ரூபாயைப் பெற அந்த ஊழியர்கள், EPFO இணையதளத்தில் கொடுக்கப்படுள்ள , FLC அதாவது Financial Literacy […]
இப்படியும் சிலர்!
உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம். நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன. ஆனாலும் அதையும் தாண்டி,நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம். நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல. நமது தினசரி பணத்தேடலில் , […]
ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார். அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன. அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று […]
பத்தாயிரம் பத்தாதேடா?
வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா! அப்படின்னு ஒரு பாடல் உண்டு. வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது. வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே […]
நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான […]
மங்களம்- நித்ய சுப மங்களம்!
மங்களம் மங்களம் நித்ய சுப மங்களம் மங்களம் என்றொரு பாடல் உண்டு. மார்கழி மாத பஜனையின் போது கார்த்திகை மாத சோமாவார பஜனை துவங்கி, மார்கழி முழுக்க விடியற்காலை பஜனை பாடி, தை 1 ஆம் தேதி அதையும் முடித்து, பிறகு அந்த பஜனை காலத்தல் வசூலான பணத்தில் பிரசாதம் தயாரித்து படையலிட்டு பஜனை பாடி பொதுமக்கள் அனைவருக்கும் பரிமாறி கணக்கு முடிக்கும் ஒரு நாள்.அந்நாளில் இறுதிப் பாடலாக இந்த மங்களம் என்ற பாடலைப் பாடுவோம். நாம் […]
விசில்- வெற்றியின் ஆயுதம்?
விசில். உலகத்திலேயே உன்னதமானது விசில். ஆரவாரத்தில் அடிப்பது விசில். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விசில். யாரையாவது கூப்பிடுவதற்கு அடிப்பது விசில். உடற்கல்வி ஆசிரியர் அடிப்பது விசில். வாட்ச்மேன் அடிப்பது விசில்.யாராவது வழிதவற நடந்தால் அவர்களை வழிநடத்த காவல்துறையினர் அடிப்பது விசில். தமிழனின் பாரம்பரியம் விசில். இரண்டாம் நூற்றாண்டிலேயே விசில் புழக்கத்தில் இருந்துள்ளது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியது விசில். கம்பரும் கூட கம்ப இராமாயணத்தில் விசிலின் பெருமை பற்றி பேசியிருக்கிறார். முதலில் தூது சென்ற அனுமன் […]
தமிழ்நாட்டின் பெருமிதம்.
குடிமைப் பொறுப்புகளை சரியாகச் செய்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். குடிமைப் பொறுப்புகள் என்பது என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சமூகத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்காகவும் தாமாக முன்வந்து செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். சட்டம் மற்றும் விதிகளை மதித்தல், வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவை இதில் முக்கியமானவை இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பது நமது […]
90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு. இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை. பாக்கெட்டில் […]