Categories
தமிழ்

PMVBRY- EPFO- ஒரு தகவல்

PMVBRY- அதாவது EPFO ( Employees provident fund organisation ) ல் முதல்முறையாக இணையும் ஊழியர்களுக்கு ( இது அமைப்பு சாரா ஊழியர்களா? என்பதில் தெளிவில்லை) 15000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வந்தது.

அதன்படி பலருக்கும் முதல் தவணையாக பாதி பணம் ரூ.7500 வரவு வைக்கப்பட்டது.

மீதி 7500 ரூபாயைப் பெற அந்த ஊழியர்கள், EPFO இணையதளத்தில் கொடுக்கப்படுள்ள , FLC அதாவது Financial Literacy Course ஐ முடித்து சான்றிதழ் பெற வேண்டும்.

இந்தப் பயிற்சிக்காக இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஓடும் 15 காணொளிகள் பதிவேற்பறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காணொளி முடிந்த பிறகும் கேட்கப்படும் 4-5 கேள்விகளுக்கு சரியான பதிலளித்தால் , அடுத்த காணொளியைக் கண்டு பதிலளிக்கும் வாய்ப்பு உருவாகும்.

பதில் தவறாகும் பட்சத்தில் காணொளியைத் திரும்பப் பார்த்து மீண்டும் பதிலளிக்கும் கட்டாயம் ஏற்படும்.

பதில் சரியாகும் பட்சத்தில் நாம் பதில்களைப் பதிவிட்டதும் அடுத்த காணொளியைக் கண்டு அதற்கான தேர்வுக்குத் தயாராக வழிமுறை பிறக்கும்.

இதை நான் எனது நண்பருக்காக முயற்சித்த போது , ஆங்கிலத்திலும் , தமழிலும் காணொளியைக் கண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த பிறகு அடுத்த கட்ட நகர்வுக்காக முயற்சித்த போது மாறி மாறி இணையதள இணைப்புக்கோளாறு மட்டுமே ஏற்பட்டது.

ஆனால் இதை இந்தி மொழியில் செய்த போது வெற்றிகரமாக நகர்வுகள் கிடைத்தது.

இந்தியில் முயற்சித்த போதும் அவ்வப்போது இணைய துண்டிப்பு நிகழ்ந்தது தான்.
ஆனால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முயற்சி செய்த போது முதல் காணொளியையே தாண்டாத நாங்கள், இந்தியில் முயற்சி செய்து 15 காணொளிகளையும் வெற்றிகரமாக முடித்து இந்தியில் சான்றிதழும் வாங்கியாயிற்று.

இது ஒருவேளை நேற்று மட்டும் நிகழ்ந்த கோளாறா?

அல்லது இணையதளமே இப்படித்தான் இயங்குகிறதா?

என்னங்க சார் உங்க திட்டம்?
7500 ரூ – இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.