Categories
சினிமா

திரௌபதி-2- திரை விமர்சனம்

திரௌபதி-2 . திரௌபதி படம் உருவாக்கிய சர்ச்சை போல இந்தப்படம் பெரிய சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும், எல்லோரும் மனதார இதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஏனென்றால் இது சுல்தானியர்கள் அதாவது இஸ்லாமிய மன்னர்கள் இந்திய நாட்டில் குடியேறி ஆட்சி செய்த போது இங்குள்ள மக்களிடம் எப்படி வரி வசூல் செய்தார்கள், பெரும்பாலானவர்களை எப்படி தனது மார்க்கத்திற்கு மாற்றினார்கள் என்பதை விளக்கி , அதை எதிர்த்துப் போராடிய ஒரு தமிழ்நாட்டு் மன்னரின் வரலாற்றைத் தழுவி எடுத்த படம். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

மகர ஜோதி மர்ம ஜோதியா?

படித்துப் பகிர்வது! நக்கீரன் இதழில் வந்த கதை. சபரிமலை மகர ஜோதி மர்மம்…. 🟢🔴🟢 சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது? மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திந்துச் செய்திருக்கலாமே? ( வெண்காரம் சம்பவம்)

சமூக வலைதளங்களின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலைபேசி மற்றும் சமூக வலைதள உபயோகங்கள் இல்லாத நபர்களாக இருப்பது அரிதாகி விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு அநியாயமான உயிரிழப்பு இந்த சமூக வலைதள காணொளி காரணமாக நிகழ்ந்ததை அறிந்து வருந்தி முடிப்பதற்குள் நேற்று இன்னொரு செய்தி நெஞ்சை உலுக்கியது. உடம்பைக் குறைக்க வேண்டுமெனக் கருதி வெண்காரம் என்ற பொருளை அளவு தெரியாமல் உட்கொண்டு ஒரு […]

Categories
தகவல் நினைவுகள்

நமது நாட்டுப்புறக்கலைகளின் பட்டியல்

பகிர்வு! தமிழ்நாட்டு நாட்டுப்புறக்கலைகளின் பட்டியல்.

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இந்த உயிர்த்தியாகம் நமக்கான பாடம்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்தவனும் இருக்கிறான். பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கிப் படம் எடுத்தவன் நீதிமன்ற வளாகத்தில் சிரித்தவாறு கையசைத்து விட்டு வாய்தாவுக்கு வருகிறான். இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்களின் மத்தியில், பல வக்கிர எண்ணங்களைச் சுமந்து கொண்டு வெளியே நல்லவன் போல, நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நாமும் கெட்டவன் தான் என்ற ரீதியில் வாழும் பலரும் நிறைந்த இந்த உலகில், ஒரு மனிதன் தன் […]

Categories
சினிமா

தலைவர் தம்பி தலைமையில் – திரை விமர்சனம்.

2026 பொங்கலுக்கு என்னனவோ எதிர்பார்ப்புகள் இருந்த சினிமா ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி படங்கள் வெளியாகாமல், ஒரு பெரிய படத்தின் வெளியீடு பிரச்சினை காரணமாக எதிர்பாராமல் இரண்டு படங்கள் வெளியானது. வெளியான பராசக்தி படமும் கூட மிகப்பெரிய அளவில் வெற்றி என்ற பெருமையை அடைந்ததா என்றால் முழுமையாக என்று சொல்லிவிட இயலாது.அந்தப்படம் விஜய் அவர்களின் படத்திற்குப் போட்டி என்று விஜய் ரசிகர்கள் கோபம் கொண்டு சிலர் படத்தைப் புறக்கணிக்கிறேன் என்று கிளம்பியதாலும், அரசியல் காரணங்களாலும் அந்தப்படம் சிறிய பின்னடைவைச் […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையை மட்டும் எரிப்போம்.

உண்ண உணவு, உடுக்க இடை, இருக்க இருப்பிடம், இவை மட்டுமல்ல மனிதனின் அடிப்படைத் தேவைகள்.நல்ல குடிநீரும், தூய்மையான காற்றும் நமது வாழ்வாதாரம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமை. அப்படியிருக்கும் பட்சத்தில் தான் தரமான நல்ல குடிநீர் வழங்குவதில் அரசாங்கம் இத்தனை மெனக்கெடுகிறது. சமீபத்தில் இந்தூரில் குடிக்கும் நீரில் கழிவு நீர் கலந்து, சில உயிர்கள் போனது கண்டு நாம் எவ்வளவு வேதனை கொண்டோம்?அது அரசாங்கத்தின் தவறு என்பதால் எளிதாக அதன்மீது பழியும் போட்டு விட்டு துக்கம் அனுசரித்து […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதநேயத்திற்கு தண்டனையா?

மாயமாகப் போகும் மனிதநேயத்தையும் அன்பையும் கேள்வி கேட்டு இன்னும் காணாமல் போக்குகிறது நமது சட்டமைப்பு. சமீபத்தில் தெருநாய்கள் கட்டுப்பாடு சம்பந்தமான வழக்கு வாதம் உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த போது தெருநாய்கள் கட்டுப்பாடுகளைப் பற்றி உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு சில கேள்விகளை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. தெருநாய் கடித்து யாருக்காவது பிரச்சினைகள் வரும்பட்சத்தில், அதாவது ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விடப்பட்ட தெருநாய்களால் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஒரு மாநில […]

Categories
சினிமா

வா வாத்தியார்- திரை விமர்சனம்.

பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான படம் வெளிவராத காரணத்நால், அவசர கதியில் வா வாத்தியார் என்ற கார்த்தியின் நடிப்பில் உருவான படம் வெளியிடப்பட்டது. படம் கடந்த டிசம்பர் மாதமே கிறிஸ்துமஸ் வெளியீடாக வர இருந்த நிலையில் தள்ளிப் போய், இப்போது இதுதான் வாய்ப்பு என்று அவசர கதியில் வெளியிட்டிருக்கிறார்கள். படம் வெளியிட்டது மட்டும் அவசர கதி என்று சொல்ல இயலாது, படமே அவசர கதியில் எடுக்கப்பட்டது போலத்தான் உள்ளது. கார்த்தி அவர்களுக்கு வேறு சினிமா வாய்ப்பே இல்லாதது போலவும், […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஏதாவது செஞ்சுவிடு ஐயப்பா!

கார்த்திகை, மார்கழி என்றாலே சபரிமலை மற்றும் ஐயப்பன் சீசன் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. மேலும் இணையங்களிலும் , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் அருள்பாலிக்கத் துவங்கி விடுவார். மற்ற மாதங்களில் ஐயப்பனை மறந்தும் , மறைத்தும் விடுவார்களோ என்ற அளவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனைப் பற்றிய சம்பாஷனைகள் அதிகரிப்பது வழக்கம். இது கேலிக்காக அல்ல. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் எப்படியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்களோ அதே […]