தற்கால நிகழ்வுகள்

  • இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்
    இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு. சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது.. அதில் ஒரு தாயார் , எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக்… Read more: இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்
  • பீர ஊத்து, பிரியாணிய ஏத்து- இது புது மாடல்
    அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற நகைச்சுவை போல, மதுவிலக்கு, மதுஒழிப்பு, போன்ற கொள்கைகளை சமரசம் செய்துவிட்டு, இல்லை இல்லை சங்கை ஊதி மண்ணில் போட்டு புதைத்து விட்டு ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள திராவிடப் போர்வாள்கள். திமுக இளைஞரணி, கட்சிக்காக என்ன என்ன செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன பணியாற்ற வேண்டும் என்று கிட்டத்தட்ட 4 மணிநேரம் ஆத்து ஆத்து என்று ஆத்திவிட்டு சோர்வடைந்த உள்ளங்களை பிரியாணி வித் பீர் என்ற மேல்நாட்டு பாணி விருந்தளித்து… Read more: பீர ஊத்து, பிரியாணிய ஏத்து- இது புது மாடல்
  • இவர்கள் மட்டுமென்ன கிள்ளுக்கீரையா?
    இன்று நான் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாத ஒரு சம்பவம். ஒரு உணவகத்திற்கு சென்று உணவுப் பொட்டலம் வாங்குவதற்காக பட்டியலை விசாரித்த்போது, அங்கே கல்லாவில் நின்றவர் , என்னிடம் சார் சார் என்று பதிலளித்து பணமும் பெற்றுக் கொண்டார். உணவுப் பொட்டலம் தயாராகும் முன்பு,ஒரு தேநீரோ காபியோ பருகலாம் என்று அதற்கும் ரசீதைக் கேட்டேன். காபிக்கு தனியாக ரசீதைத் தராதவர், வெளியே இருந்த அந்த காபி போடும் அம்மாவிடம், அலமேலு சாருக்கு ஒரு காபி போடு என்றார்.… Read more: இவர்கள் மட்டுமென்ன கிள்ளுக்கீரையா?
  • அப்பாவிகளின் பலிக்கு அப்பாவிகளை தண்டிப்பதா?
    பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த பாவத்திற்காக, அந்த நாட்டைச் சார்ந்த அப்பாவி மக்களைப் பழிவாங்குவதும் ஒரு விதத்தில் பயங்கரவாதம் தான். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கும் நோயாளிகள் உட்பட அனைவரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நடவடிக்கையும், பெரும்பாலான பாகிஸ்தான் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமும், பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் ஆன சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற நடவடிக்கை எல்லாம் மிக முட்டாள்தனமான மனிதநேயமற்ற செயல். 26 இந்தியர்களைக் கொன்ற… Read more: அப்பாவிகளின் பலிக்கு அப்பாவிகளை தண்டிப்பதா?
  • மதங்களைக் கடந்து அன்பு பரவட்டும்.
    இன்று நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சம்பவம், காஷ்மீரில் நடந்த படுகொலைகள் தான்.சுற்றுலா சென்ற பயணிகளை, லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடன்ட் ப்ரெண்ட்ஸ் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் எந்த மதம் என்று கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாய தாக்குதல் என்று பேசி, ஒரு மதத்திற்கு எதிராக இந்த பயங்கரவாத சம்பவத்தை அடிக்கோளிடுவது முறையல்ல. இஸ்லாமிய… Read more: மதங்களைக் கடந்து அன்பு பரவட்டும்.