நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன்.
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் தொனியிலே பதில் அளித்தார்.

மேலும் கோவில்பட்டி வந்து சேர்ந்த போதும் நல்ல மழை. பயணிகளில் பல வயோதிகர்களும் (எனது தாயார் உட்பட) இருந்தார்கள்.
பேருந்து நிலையத்திற்குள் போகாது என்றவாறு நிலையத்திற்கு வெளியவே ஒரு 5 நிமிடம் பேருந்தை அணைத்து நிறுத்தி விட்டார்கள்.
சிலர் போய் ஓட்டுநரிடம், ஐயா மழை பெய்கிறது, உள்ளே சென்று எங்களை இறக்கி விடலாமே என்று கேட்டதற்கு, நாங்க உங்கள எறங்கச் சொன்னமா?
எங்களுக்கு உள்ள போக இன்னும் நிறைய நேரம் இருக்கு. நீங்க உள்ளதான் இறங்குவீங்கண்ணா, உட்காருங்க. உள்ள போறப்ப இறங்குங்க என்று திமிராக பதில் அளித்தார்.
சரி நேரம் ஆகும் என்று எல்லாரும் இறங்கிவிட்டார்கள். நான் தான் கடைசி பயணியாக இறங்கினேன்.
நான் இறங்கிய உடனே, அடுத்த நொடியே பேருந்தை இயக்கி, நிலையத்தின் உள்ளே சென்று தூத்துக்குடி மார்க்க வழித்தடத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு, நடத்துனரும், ஓட்டுநரும் கடலை வாங்கி உண்டார்கள்.
இது என்ன மாதிரியான ஒரு மனநிலை?
அப்படி வயதானவர்களை மழையில் நனைய வைப்பதில் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறதோ?
இவர்களை நல்ல மனோத்த்துவ நிபுணர்களிடம் சிகிச்சை எடுத்து சரியான பிறகு பொது சேவைத் தொழிலுக்கு அனுப்பினால் குடிமக்களுக்கு நல்லது.
இது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் மனுவும் அளித்துள்ளேன்.
என்ன பதில் வருகிறது என்று பார்க்கலாம்.
இதில் பல பயணிகள் இந்த நடத்துனர், ஓட்டுநர் செய்தது தவறு என்பதைக் கூட உணராமல் கடந்து செல்லும் அளவிற்கு இந்த விஷயத்திற்குப் பழகியிருந்தது தான் தாங்கமுடியவில்லை.