Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி.

நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார்.

இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார்.

இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை ஒரு புதிய பொருளாதாரப் பாதையை நோக்கி நகர்த்திச் சென்றது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

இவருடைய தற்குறிப்பு, அதாவது Resume ஆனது 8 பக்கங்களை உடையது. பிரதமராவதற்கு முன்பே.

இவர் வாழ்நாளில் இவ்வளவு விஷயங்களைச் செய்திருக்கிறார் என்பது வியக்கத்தக்கது.

மேலும் இவரது ஆட்சிக்காலத்தில் இயன்ற வரை சுற்றத்து நாடுகளோடு நட்பு பாராட்டப்பட்டது.

பழகுவதற்கு மிக எளிமையான மனிதர் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது உண்டு.

இவரைப்பற்றிய கேலிப்பதிவுகள் பலவும் வந்தருக்கின்றன. Silent P.M , பொம்மை என்றெல்லாம் விமர்சனங்களும் கூட வந்திரிக்கின்றன.
இவரைப் பற்றி ஒரு சினிமா கூட வந்தருக்கிறது.

எத்தனை எத்தனை குற்றங்கள் சாட்டப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சிக்கு இவரளித்த பங்கு அளப்பரியது. மேலும் இந்திய அரசியல் என்பது இவரது பெயரில்லாமல் இல்லை.

முன்னாள் பிரதமருக்குப் பிரியா விடையளிக்கும்
நினைவுகள்.

தொடர்ந்து வாசிக்க