2016 ஆம் ஆண்டில் நான் எனது முகப்புத்தகத்தில் எழுதியிருந்த விளம்பர ஆதிக்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் தந்திரம் பற்றிய ஒரு பதிவு.
அன்றே நண்பர் சிவப்ரேம் இந்தப்பதிவைப் படித்து வியந்து பாராட்டினார்.
பதிவின் சாராம்சமான, இளநீர் பெட் பாட்டிலில் அடைத்து விற்கப்படலாம் என்ற விஷயம்,, வெளிநாடுகளில் துவங்கி விட்டதாகச் சொன்னார்.
இன்று இங்கேயும் கூட வந்து விட்டது அந்த நிலை.
இனியாவது மாறுவோமா?
பதிவு கீழே!
பிச்சைக்காரன்.. ஒருவனிடம் ஒரு ரூபாய் பெறுகிறான்..
ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 15 பேர்..
12 மணிநேரம் பிச்சை எடுத்தால் அவன் சம்பாதிப்பது?
180 ரூபாய்..
அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்திற்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இரு மடங்கு..
இதேபோல ஒரு விஷயமும் மண்டையைக் குடைகிறது.
தொலைக்காட்சி பார்ப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது..
இன்று சிறிது நேரம் பார்க்க நேர்ந்த போது, அரைமணிக்கொரு முறை தவறாமல் சில விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது..
அதில் ஒன்று..
வெறும் 10 ரூபாய் வியாபாரம்..
ஆனால் அதற்கு அத்தனை முறை, அவ்வளவு பெரிய நடிகர்களைக் கொண்டு விளம்பரம் செய்ய பணமேது?
எல்லாம் நாம் 10 ரூபாய் கொடுத்து வாங்குவதில் அவன் அடையும் கொள்ளை லாபம் போக மீதமிருக்கும் காசு தானே?
ஆமாம்.. நான் பார்த்தது Pepsi விளம்பரம்..
சொல்லப்போனால் கேவலம் 10 ரூபாய்.. ஆனால் அதில் அவன் அடையும் லாபம்?
சொல்ல முடியாது.. அந்த பணத்தை மீட்டால் நம் நாடே வளமான நாடாகி விடலாம்.. அந்த கோலா தயாரிப்புக்கான தண்ணீர் இன்னும் கேவலமான மலிவு விலையில் அவர்களுக்குத் தாரை வார்க்கப்படுவதும் அவலம்.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் நடிக்கிறார்கள்..
Pepsi குடிக்க சொல்லி.. அதென்ன சத்து டானிக்கா?
கேவலம் பணம்..அதற்காக இப்படி மக்களை ஏமாற்றலாமா?
இப்படி கேவலம் பணம் என்று Pepsiக்கு வாரி வழங்கும் பணத்தில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட மரமேறி கஷ்டப்படும் இளநீர் வியாபாரிகளுக்கு நாம் மனதாரத் தருவதில்லை..
காரணம்.. விளம்பரம்.. கெளரவம்..
ஏம்ப்பா இளநீர் 25 ரூபாயா?
என்னப்பா ஊர ஏமாத்துற என்று ஜம்பமாகக் கேட்கும் நாம்.. 2 ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாராகும் Pepsi ஐ 10 ரூபாய் கொடுத்து குடிக்கத் தயங்குவதில்லை..
கெட்ட வார்த்தை சொல்லி நம்மைத் திட்டிக் கொண்டால் கெட்ட வார்த்தைக்கு அசிங்கம்..
அந்த விளம்பரம்.. அட்டகாசம்..
ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒருவன் பச்சத்தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று கூவிக் கொண்டிருக்க இன்னொருவன் Pepsi ஐ குடிக்கிறான்.. குடித்துவிட்டு.. நம்ம Pepsi ப்பா.. என்கிறான்.. கடைசியில் உண்ணாவிரதம் களைந்து மொத்த கூட்டமும்.. ஏ தில் மாங்கே மோர்..
அவனே இவ்வளவு வெளிப்படையாக சொல்லுகிறானே? நாமெல்லாம் மாங்கா மோர் (மாங்கா மடையர்கள்) என்று.
இதுக்கு மேலயும் நமக்குப் புரிய மாட்டேங்குதே??
கூடிய விரைவில் அவன் இளநீர் விற்பனை செய்வான்.. Pet bottle ல் அடைத்து.. அப்போது ஒரு இளநீர்.. 200 ரூபாய்..
அப்ப நாம 200 ரூபாய் கெடுத்துக் குடிப்போம்..
நம்ம விவசாயிகளுக்கு ஒரு இளநீருக்கு 25 இல்ல 30 ரூபாய் கொடுத்து விடுவார்கள் அந்த கம்பெனி ஆட்கள்.. அவர்கள் நம்மைப் போல அல்ல.. வியாபாரம் தெரிந்தவர்கள்.
விவசாயிகளிடம் நல்ல பெயர் வாங்கி மொத்த இளநீரையும் அவர்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள்..
அதே வேளையில் ஒரு இளநீருக்கு 170 ரூபாய் லாபம் பெற்று விடுவார்கள்..
சொல்ல முடியாது.. இளநீர் விளம்பரத்தில் அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர் நடிக்கலாம்..
அவர்கள் நம்மைப் போல முட்டாள்கள் கிடையாது..
விளம்பரம் வந்தால் , 10 ரூபாய்க்கு என்ன 100 ரூபாய்க்கு விற்றாலும் நாங்கள் வாங்கிக் குடிப்போம்..
நாங்கள் கேடு கெட்ட கேவலமான அறிவென்பது அறவே இல்லாத முட்டாகள்கள் ஆயிற்றே!!
Yeh dil maange more..aahaan