நாம் எந்த அளவிற்கு சுய சிந்தனையோடு வாழ்கிறோம்? எந்த அளவிற்கு சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களால், ( தனக்கான பரத்யேகமான செல்வாக்கை உருவாக்கியவர்கள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்பதை மீண்டும் இந்த கூமாப்பட்டி விஷயம் நமக்கு நிரூபித்து விட்டது. விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி சட்டத்திற்குப் புறம்பான வேகத்தில் ஓட்டுபவனைத் தலைவன் என்று கொண்டாடியது நமது இளைய சமுதாயம். அதில் எத்தனை பேரின் தந்தை, ஓட்டுநர்கள் அன்றாடம் தமது உயிரைப்பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடுபவர்கள் என்பது தெரியவில்லை. எதற்காக ஒருவர் பிரபலமாகிறார் […]
