Categories
சினிமா

லெவன்- திரை விமர்சனம்

சில நல்ல சினிமாக்களை நாம் திரையில் தவற விடுவோம். காரணம், அந்த சினிமாக்கள் வந்த காலத்தில் வரும் வேறு பெரிய சினிமாக்களோ, அல்லது நமக்கு மிகவும் பழகிப் போகாத நடிகர்களோ நடித்திருந்திருக்கலாம். அப்படி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்த லெவன் என்ற படம் சத்தமே இல்லாமல் பலர் மனதைக் கவர்ந்து இன்றும் திரையிலும், ஓடிடி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது. படத்தைப்பற்றி ஆஹா , ஓஹோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் புகழ்ந்து தள்ளியபோது எனக்குள் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் நியாயமாகப் பேசலாமே?

வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஒரு சொல்லாடல் உண்டு. அது பிறரை பழித்து, ஏசி, தேவையில்லாமல் பொய் பேசக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட சொல்லாடல். இன்று இணையதளம் இருக்கிறது, பேசுவதற்கு, எழுதுவகற்கு மிகவும் சௌகரியமாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதற்காக பலரும் தாம் நினைப்பதை வகை தொகை இல்லாமல் பேசியோ எழுதிய விடுகிறார்கள். இதில் பல பேர் தங்களுடைய சுய விவரத்தில் இல்லாமல் போலி அடையாளங்களுடன் இணையத்தில் உலா வருகிறார்கள். இதில் சமீபத்தில் பேசு […]

Categories
கருத்து நினைவுகள் மறைவு

அப்பாக்களுக்காக..

If u want to be a role model, be a father or a teacher..அனுபவித்த வாசகம்… மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்.. மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா  வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக. இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு […]

Categories
ஆன்மீகம் கருத்து

வாழ்க்கைக்கான சிந்தனை

நல்லதொரு சிந்தனையோடு முதல் நாளைத் துவங்குவோம். படித்ததில் பிடித்தது. ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய […]

Categories
சிறுகதை

கணவர்களின் அவல நிலை.

படித்ததில் ரசித்தது! ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர் கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது! வையத்தியரும் சொன்னதில்லை! மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை! ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக் காணவில்லை. […]

Categories
சினிமா

படை தலைவன் – விமர்சனம்

படைத்தலைவன் இல்லை படை தலைவன் என்று தான் பெயரிட்டிருக்கிறார்கள். இரண்டு பெயர்ச்சொல் ஒன்றிணையும் போது இடையில் வல்லினம் மிகுந்து படைத்தலைவன் என்று தான் இது இருந்திருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ, வல்லினத்தை விட்டு விட்டார்கள். அதேபோலத்தான் படமும். சில விஷயங்களை விட்டு விட்டார்கள். படத்தின் மூலக்கதை என்பது என்பதை சூசகமாக இறுதிக்காட்சி வரை நமக்கு சொல்லவே இல்லை. அந்த மூலக்கதையை பற்றிய காட்சிகளை படத்தின் ஆரம்பத்தில் ஏதும் காட்டியிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் சிறிது தாமதமாகத்தான் படம் […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

ஆழ்ந்த இரங்கல்!

விபத்து. தவர்க்க முடிந்தால் தவிப்பு இல்லை.ஆனால் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து நம்மைத் துயரில் ஆழ்த்துவது தான் விபத்து. அதிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பெரும் விபத்து என்றால் நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்து விடவோ அல்லது ஜீரணிக்கவோ இயலாது. எத்தனை கனவுகளையோ, எத்தனை பாசங்களையோ, எத்தனை தொழில் ஏற்பாடுகளையோ, உயிர்களின் கூறாக, வெவ்வேறு நாட்டைச் சார்ந்த மக்களை தூக்கிப் பறக்கத் துவங்கிய , பறக்கும் விசை சரியாகக் கிடைக்காத காரணத்தால் பறக்கத் துவங்கிய சில […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

புலியைப் பார்த்து பூனை கோடிடலாமா?

பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை. மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது. காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி […]

Categories
சினிமா நினைவுகள்

ஆண்டவா- மீண்டு வா- கமல் ரசிகன்

பூசாரிக்கு அலங்காரம் செய்யத் தெரியாவாட்டால், கருவறையில் இருக்கும் கடவுள் கூட அலங்கோலம் தான்.ஆனாலும் கடவுள் எப்போதும் கடவுள் தான்..கல்லாகப் பார்த்தால் கல்.சிலையாகப் பார்த்தால் சிலை. அப்படி ஒரு அற்புதமான சிலை தான், இப்போது தொடர்ச்சியாக அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாக கமலஹாசன் படங்கள் என்றால் ஓரிரு நாட்களிலும், நானே சினிமாவிற்குத் தனியாகப் போக ஆரம்பித்த பிறகு முதல் நாளிலும் படம் பார்த்து விடுவேன். பின்புலமும் காரணமும் இல்லாமல் இல்லை. என் தந்தையும் சரி எனது அண்ணனும் சரி தீவிரமான […]