சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு […]
Month: June 2025

உலகின் மிக உயரமான ரயில் பாலம்.செனாப் ஆற்றின் குறுக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆற்றுப் படுக்கையிலிருந்து 359 மீட்டர் அதாவது 1180 அடி உயரத்தில் கம்பீரமாக உலகே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த அந்தப் பாலத்தில் நம் நாட்டின் தற்போதைய பிரதமர் திரு.மோடி அவர்கள் கம்பீரமாக மூவர்ணக்கொடியோடு நடந்து வர, அதை அந்தக் கட்சியினர் தம் கட்சிக்கே உரிய சாதனை போல, சமூக வலைத்தளங்களில் […]

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]
சாங்கியங்கள் உண்மைதானா?

சொர்க்கத்தில் இருக்கும் அன்பு தந்தைக்கு , அன்புடனும், வணக்கங்களுடனும் அன்பு மகன் எழுதும் கடிதம். நாங்கள் இங்கே தங்கள் பிரிவில் வாடுகிறோம்.நீங்களும் அதுபோல எங்களைப் பிரிந்து வாடுகிறீர்கள் என்பதை அறிகிறோம். தங்களுக்கு கடந்த தை அமாவாசை அன்று காலை எள்ளு பிரசாதத்தை காலை உணவாக ஐயரிடம் மந்திரம் சொல்லி அனுப்பச் செய்தேன்.வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். கொரியர் ஆபிஸில் தருவது போல இவர்கள் ரசீது எதுவும் தருவதில்லை.100 ரூபாய் வாங்கிக் கொண்டு மந்திரத்தை சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார்கள்.அதனால்தான் […]
ஆசிரியர்களின் அவல நிலை

கல்லூரி, பள்ளி நிர்வாகம், பல்கலைக்கழக குழு, சமுதாயம், கொரோனா, இப்படி பலவும் அடித்து துவம்சம் செய்த ஆசிரியர் ( குறிப்பாக தனியார் பள்ளி, கல்லூரி) சமுதாயத்தை, இன்னும் மாணவர்கள் மட்டும் தான் அடிப்பது பாக்கி. அதுவும் இப்போது ஆங்காங்கே நிகழ்கிறது. ஒரு ஒழுக்கமான, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உழைப்பது தான் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்வில் செய்யும் தவறு போல! ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மூடப்பட்டால் அதன் தொழிலாளர் நலன் கருதி வழக்குத்தொடுக்கும் சங்கங்கள், […]
ஒரு மாதிரியான உலகமிது!

ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்..நல்லவர்களும் இருக்கிறார்கள்.சுழன்றால் என்ன நின்றால் என்ன? நல்லவர்கள் பாதிக்கப்படுவார்களே? எனது கண்முன்னே நடந்த அநியாயம். பழையது என்றாலும் நினைவிலிருந்து நீங்காத ஒன்று. ஒரு சுமாரான அளவிலான காய்கறி கடையில், கல்லாவில் இருந்தது ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்…அவரிடம் வந்து ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை ஆசாமி, ஏதோ ஒரு பொருளை வாங்கிவிட்டு 2000 ரூ தாளை நீட்டினார்.. என்னப்பா இது 60 ரூ பொருளை வாங்கிட்டு 2000 தாளை தருகிறாயே என்று அந்த […]
கட்டம் எப்படி இருக்கிறது?

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எதற்காக? கணவன் மனைவி சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வதற்கு தான் ஜாதகப் பொருத்தமா? அல்லது வாழ்க்கை முழுதும் அந்த உறவு நிலைக்குமா என்பதை சோதிப்பதற்காகவா? சரி வீட்டில் சேர்ந்து வசிப்பது தான் முக்கியப்பிரச்சினை எனில் சென்னை போன்ற நகரங்களில், வீடுகளில் , விடுதிகளில் தங்கியுள்ள கூட்டங்கள் எந்த ஜாதகம் பொருந்தி வாழ்கிறார்களோ? தெரியவில்லையே!( தெரிந்த முகம், தெரியாத முகம், ஒரே இனம் , வேறு இனம் ஒரே பாலினம், வேறு பாலினம் என்ற […]
கோர்ட்- திரை விமர்சனம்

சினிமாக்கள் எல்லாமே மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடுவதில்லை. ஒரு சில நல்ல கதையம்சமோ, கருத்தோ, திரைக்கதையோ உள்ள சினிமாக்களே மக்களிடம் நற்பெயர் எடுக்கின்றன. அப்படி சமீபத்தில் தெலுங்கில் வெளியான கோர்ட், திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. காரணம், சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையும், நீதிமன்ற வாதக்காட்சிகளும் தான். 12 ஆவது வகுப்பு முடித்து, ஒரு சில தேர்வில் தோற்று, சிறு சிறு வேலைகளைச் செய்து தன் வாழ்வை கவனித்துக் கொள்ளும் ஒரு ஏழைப்பையன்.அவனது அப்பா காவலாளி வேலையும் […]

கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ? இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் […]