Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இலவச போலி உபதேசங்கள்

இன்று சமூக ஊடக இடுகை ஒன்றைப் பார்த்தேன்.

சமூக ஊடக இட்டுகை என்பது சோசியல் மீடியா போஸ்ட், தமிழ் மாநாட்டில் சமீபத்தில் 25 க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை உருவாக்கி உள்ளனர்.

அதில் இந்த வார்த்தையும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வார்த்தகயின் தமிழாக்கத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன்.

லிவிங் டுகதர் என்ற வார்த்தைக்கு மன வாழ்க்கை என்று தமிழாக்கம் செய்திருக்கின்றனர்.

யார் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாகத்தான் உள்ளது.

சரி அதை விடுத்து நமது சமூக ஊடக இடுகைக் கதைக்கு வரலாம்.

அந்த இடுகையில் சொல்லப்பட்ட கருத்து என்னவென்றால், நாம் நமது பணத்தை எவ்வாறு இழக்கிறோம், எதனால் வீண்டிக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு 16 விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஓரளவு சில விஷயங்கள் நியாயமானதாக இருந்தாலும் கூட, சில விஷயங்கள் குபீரென சிரிப்பை வரவழைக்கும் விதமாகவே இருந்தன.

அதில் முதலில் நான் கண்ட முரண் தள்ளுபடி ஏதாவது கிடைத்தால் அதைத் தவிர்க்காமல் பயன்படுத்திப் பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பது.

மக்களை முட்டாளாக்கி தேவையிருந்தாலும் , இல்லாவிட்டாலும் , அதிகப்படியான நுகர்வை உருவாக்கும் வியாபாரிகளின் தந்திரம் தான் இந்தத் தள்ளுபடி வியாபாரம்.
யாரும் இங்கே தர்மம் செய்வதற்காக வியாபாரி ஆகவில்லை..
அப்படியிருக்கும் போது தள்ளுபடி என்ற பெயரில் அவர்கள் செய்யும் வியாபாரம் மட்டும் என்ன தர்மத்திற்கானாதா?
அதுவும் லாபத்திற்கானது தான் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

இதிலே இன்னொரு முரண் என்னவென்றால், ஆன்லைனில் பொருட்களை வாங்கக் கூடாதாம்.
அப்படிப் பார்த்தால் ஆன்லைனில் தான் வருடத்தில் பாதி நாட்கள் தள்ளுபடி வியாபாரம் நிகழ்கிறது.

அடுத்தது ஓடிடி தளங்களை பணம் கொடுத்து உபயோகிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓடிடி தளங்களுக்கு பணம் செலுத்தாமல் குடும்பத்தோடு சினிமா திரையரங்குகளுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும் என்றால் சம்பாதிப்பதற்கு கொக்கைன் வியாபாரம் தான் பார்க்க வேண்டும்.

ஆக சமூக ஊடக இடுகையை பதிவு செய்தவர், மக்களின் நலனுக்காக இதைச் செய்வது போன்ற தோற்றத்திற்காகச் செய்திருந்தாலும், உண்மை அதுவல்ல.

இது மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் மலிவான வியாபாரத் தந்திரமாகக் கூட இருக்கலாம்

இந்த அவசர உலகத்தில் , மக்களுக்கு எதையும் பார்த்து கவனித்து அதன்படி நிற்பது என்பது அரிது தான்.

ஆனாலும் கவர்ச்சிகரமான அந்த ஊடக்இடுகையைப் பார்த்துத் தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக இந்தப் பதிவு.

அந்தப் பதிவில் புகை பிடிப்பது, மது அருந்துவது , இதெல்லாம்கூட இருந்தது. இவற்றையெல்லாம் நாம் புறக்கணிக்க முடியாது.

ஆனால் நல்லது சொல்வது போலத் துவங்கி இடையிலேயே தமக்குத் தேவையானவற்றைப் புகுத்தியது வியாபாரத் தந்திரம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.