மனிதர்களில் பல ரகம்.
அன்பின் வடிவான அன்னை தெரசாவும் மனிதன் என்ற பிரிவு தான். கள்ளக்காதல் இச்சைக்காக, உடல் சுகத்துக்காக, கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, பெற்ற இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்வளும் மனிதப் பிறவி தான்.
“அபிராமி, அபிராமி… மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.
அதையும் தாண்டிப் புனிதமானது.”
சமைக்கும் போது மனக்கும் பிரியாணி்போல, சாப்பிடும் போது ருசிக்கும் மசாலா போல, உவமிக்க இயலாத உன்னத காதல்.
டிக்டாக்கில் உருவாகி டக் டக் என்று கணவன் இல்லா நேரத்தில் கதவைத் தட்டிய கள்ளக்காதல்.
கணவன் இல்லாவிட்டாலும், அவனை நியாபகப்படுத்தும் விதமாக இங்கே இரண்டு உயிர்கள் உள்ளது, உல்லாசம் செய்ய ஓடி விளையாட அதுக இரண்டும் இடைஞ்சலாக உள்ளது என்று பாலில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகக் கலந்து கொடுத்து கள்ளக் காதலனுடன் காம விளையாட்டு விளையாடி மகிழ்ந்தவளும் மனிதப் பிறவி எனும் போது, உலகிலுள்ள மற்ற ஜீவராசிகள் அனைத்தும் மனித குலத்தைப் பார்த்து காரி உமிழ்வது போல உள்ளது.
இரண்டு குழந்தைகளைக் கொல்லும் அளவிற்கு அப்படி ஒரு காதல் தேடல், காம இச்சை உண்டாகுமா என்பது இப்போது தான் உணரப்படுகிறது.
கஞ்சா குடிக்கும் ஆசாமிகள் போதையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொல்வது போலத்தான் இந்தப்பெண்ணின் செயல் இருந்திருக்கிறது.
சமயங்களில் இது மாதிரி ஆட்களை கொன்று பிடிப்பது போல, இந்த வழக்கிலும் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதைப் பொதுமக்கள் கொண்டாடித்தான் இருப்பார்கள்.
அத்தகைய கோபம் அனைவருக்கும் உள்ளது.
உலகில் குழந்தை பாக்கியமில்லாமல் எத்தனை எத்தனை தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள்?
அப்படி இருக்கும் சூழலில் கேவலம் டிக்டாக் போடவும் பிரியாணி திங்கவும், கள்ளத் தொடர்புக்கும் ஆசைப்பட்டு இப்படி ஒரு மாபாநகத்தைச் செய்திருப்பவளுக்கு தூக்கு தண்டனை தரப்பட்டிருந்தால் இன்னும் மன ஆறுதலாக இருந்திருக்கும்.
ஆனால் சட்டத்தின் படி உட்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை அளித்திருப்பது வரவேற்க்கத்தக்கது.
அதிலும் இவர்கள் 7 வருடம் சிறையில் இருந்து விட்டோம், இனி தாய் தந்தையைப் பார்த்துக் கொண்டு மீதி வாழ்க்கை வாழப்போகிறோம் என்று கருணை மனு போட்டதெல்லாம், இவர்கள் இன்னும் திருந்தவில்லை என்றே தோன்றுகிறது.
மனதார ஆயுள் முழுக்க சிறையில் கிடந்து செத்துப் போய் அடுத்த பிறவியில் நல்லபடியாகப் பிறந்து வாருங்கள் என்று நீதிபதி அளித்த தண்டனைதான் அந்த குழந்தைகளின் ஆன்மாக்களுக்கான நியாயம்.