சமீப காலங்களில் மிகப்பெரிய கொள்ளை, பகல் கொள்ளை எது என்றால், அது தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தான்.
3-3.5 வயது நிரம்பிய பிள்ளைகள் LKG படிப்பதற்கு சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாகப் பெறுவதும், அதை மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பெற்றோர்கள் கட்டுவதும் வழக்கமாகிப் போனது.
சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பள்ளியின் LKG வகுப்பிற்கான கட்டண ரசீதைக் கண்டு மிரண்டு போனேன்.
அதைப்பற்றி சிறிது விளக்கமாக எழுதி எனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ள விருப்பம்.
டியூசன் ஃபீ , அதாவது கற்பித்தலுக்கான கட்டணம் , 40000 ரூபாய்.
அந்த இத்துப்போன ABCD ஐ முழுதாகக் கூட சொல்லிக் கொடுப்பார்களோ என்று தெரியவில்லை. அதற்காக 40000 ரூ.
அடுத்தது, extra curricar activities fees, அதாவது, கல்வி தவிர்த்துப் பிற நடவடிக்கைகளுக்கான கட்டணம்.
பிற நடவடிக்கைகள் என்பது சந்தானம் நகைச்சுவையாக சொல்வது போல, வாக்கிங் வித் லெமன் இன் த ஸ்பூன், தானே?
வேறென்ன செய்யப் போகறார்கள், யோகா, கராத்தே, என்று கை காலை குறுக்கு மறுக்காக அரை குறையாக ஆட்டி விட்டு அதற்கு ஒரு பத்தாயிரம் பில்.
உண்மையிலேயே நல்லவிதமாக யோகா பயிற்றுவிக்கப்பட்டால், எத்தனையோ குழந்தைகள் இன்று யோகா செய்யும் ஆட்களாக மாறி இருக்குமே?
ஆனால் பெரும்பாலான மாணவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
அடுத்தது பராமரிப்புக்கு என்று பத்தாயிரம் ரூபாய்.
என்ன பராமரிப்பு? யார் பராமரிக்க யார் காசு தருவது?
இன்னொரு கொடுமை, infrastructure development fees 60000 ரூ.
அதாவது உள்கட்டமைப்பை சீர்படுத்த.
கட்டமைப்பு நல்லா இருக்கும் தானே தனியார் பள்ளிக்கு படையெடுக்கிறார்கள்.
இந்த 60000 ரூபாயை அரசுப்பள்ளிக்கு செலுத்தினால் அங்கேயும் நல்லவிதமாக கட்டமைப்பை சரிசெய்யலாமே?
ஆனால் அதை நம் மக்கள் மனதார ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தனியார் பள்ளியில் தாலியை அடகு வைத்துப் படிக்க வைத்தால் தான் பிள்ளையின் வாழ்க்கை முன்னேறும் என்று போலியான ஒரு நம்பிக்கையோடு வாழ்பவர்கள் திருந்த வேண்டும்.
சரி எனக்கு ஒரு சந்தேகம்.
2 லட்சம் ரூபாய்க்கு LKG ல அப்படி என்னதான் சொல்லித் தருவாங்களோ?



