Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை.

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.
அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது.

அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை.

தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண வேண்டும் என்ற பேராவல்.

அதனால், கப்பலின் உள்ளே ஓடிச் சென்று , ஒரு பெண்ணின் உடைகளைத் திருடி அணிந்து கொள்கிறான்.

மேலும் பொருந்த வேண்டும் என்பதற்காக, உதட்டுச்சாயம் பூசி , தலையில் ஒரு தொப்பியும் வைத்து மறைத்துக் கொண்டு பெண் போலவே சென்று உயிர்காக்கும் படகில் ஏறுகிறான்.

அந்தப் பதட்டத்தில் துல்லியமாக யாரும் யாரையும் காணாததால், இவனையும் பெண் என்று நினைத்து , படகில் ஏற்றிவிட , இவன் உயிர்பிழைத்து விட்டான்.

டைட்டானிக்கில் இருந்து உயிர் பிழைத்து பலரும் வருகிறார்கள் என்று மக்கள் ஒரு மன ஆறுதலோடு உயிர் பிழைத்து வந்தவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கிறார்கள்.

இவன் ஆண் என்று தெரிந்தாலும் கூட, பரவாயில்லை, ஏதோ அந்த நேரம் யோசித்துத் தப்பித்து விட்டான் என்று பாராட்டி, இவனை ஜப்பான் அனுப்ப ஏற்பாடு நிகழ்கிறது.

ஜப்பானுக்கு மகிழ்வுடன் பயணிக்கிறான்.

அங்கே இவனை வரவேற்க இவனுது தாய் , தந்தை , சகோதரர்கள் எல்லாம் காத்திருந்தார்கள்.

அவர்களிடம் இவன் சென்றடைந்த உடன் அவன் தாய் இந்து கன்னத்தில் பளார் என்று அறை விடுகிறார்.

சகோதரர்களும் தங்கள் கோபம் தீர அடிக்கிறார்கள்.

அவர்கள் அடிப்பதை வியப்பாகப் பார்த்து,பிறகு தடுத்து விட்ட அமெரிக்கர்கள், “நாங்கள் இத்தனை பாடுபட்டு மீட்டுக் கொண்டு வந்தவனை ஏன் அடிக்கிறீர்கள் ? ” என்று கேட்கிறார்கள்.

அதற்கு அந்தத் தாய், இவன் உண்மையிலேயே ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைத் தட்டிப் பறித்து விட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வந்துள்ளான்.

கப்பலில் இருந்து ஏதாவது சில உயிர்களைக் காப்பாற்றி இவன் மூழ்கி இறந்திருந்தால் கூட, சில நாள் அழுகையோடு , என் மகன் மனாதாபிமானி என்ற பெருமையோடு மறந்திருப்பேன்.

ஆனால் இவன் இப்படிப் பெண் வேடமிட்டுத் தப்பித்து, எங்கள் நாட்டிற்கும், குடும்பத்திற்கும் , மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டான்.

இவன் ஜப்பானியானாகவோ, அல்லது எனது மகனாகவோ இருப்பதற்குத் தகதியற்றவன் என்று சொல்கிறார்.

ஒழுக்கமும்,சுறுசுறுப்பும், மீண்டெழுதலும், மனிதாபிமானமும் ஜப்பானியர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.