Categories
கருத்து நினைவுகள்

இடைவேளை அவசியம்!

இடைவேளை- இடைவெளி அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம். எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர்  சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]

Categories
நினைவுகள்

அன்பான வேண்டுகோள்!

சமூக இணையதளம் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் தான் என்றாலும், எனக்கு அது அப்படி இருந்தது இல்லை. அதிலும் குறிப்பாக முகப்புத்தகம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது. வெறுமனே பொழுதுபோக்கு என்றில்லாமல், எனது மனதிலிருந்த சோகங்களை எழுத்துகளின் மூலமாகப் பகிரத் துவங்கி , பிறகு சினிமா விமர்சனம், அரசியல் துணுக்குகள், தற்கால நிகழ்வுகள் பற்றிய கேலி விமர்சனங்கள், நல்ல கருத்துகள், சிந்தனைகள் என்று எனது எழுத்து மெருகூட்டப்பட்டது என்னவோ இந்த வலைத்தள பக்கத்தின் அறிமுகத்தினால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மாட்டிக்கிட்டீங்க பங்கு!

திருட்டுகள் பலவிதம், திருடர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். இன்றைய சூழலில் திருட்டுத்தனம் செய்து அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைப்பது பெரும்பாலனோரின் முழுநேரத் தொழிலாகவே மாறிப்போனது. சில மாதங்களுக்கு முன் என் கண்முன்னே நிகழ்ந்த ஒரு பகல் நேர ஏமாற்று வேலை பற்றி பதிவிட்டிருந்தேன், பலரும் படித்திருக்கலாம்.ஒரு பரபரப்பான காய்கறி கடைக்கு வந்த ஒரு ஆள், ஏதோ ஒரு காய் வாங்கிவிட்டு 35 ரூ வியாபாரத்திற்கு 2000 ரூ தாளை நீட்டினான்.அந்தக் கடைக்கார அம்மாவோ கடிந்து கொண்டே, சில்லறை […]