யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.
அதற்குக் காரணமில்லாமல் இல்லை.
யானையின் தனித்துவம்.
காட்டுக்கு ராஜா சிங்கம் என்பார்கள், ஆனால் சிங்கத்திற்கு இந்தப் பொன்மொழி ஒத்துப்போகாது.
இந்தப்பொன்மொழி உலகில் வாழ்ந்து மறைந்த கோடான கோடி மனிதர்களில் ஒருவருக்குத் தான் ஒத்துப் போகும். அப்படி ஒரு உன்னதமான மனிதன்,
தங்கத்திருமகன், தன்னிகரில்லாத் தமிழ்த்திருமகன், தன்னலமற்ற தலைவன், மக்கள் பற்றாளன், அன்புள்ளம் கொண்ட அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்.
அண்ணன் நடிகனாக இருந்த போது திரைத்துறையின் கடைநிலை ஊழியர் வரை அன்பு காட்டினார்.
என் தட்டில் என்ன பரிமாறப்படுகிறதோ, அதேதான் இங்கே இருக்கும் கடைநிலை ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என்று தன் சொந்த செலவில் சமபந்தி முறையை வளர்த்த நல்லவர்.
நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது நஷ்டத்திலிருந்த நடிகர் சங்கத்தைத் தூக்கி நிறுத்தி அந்த சங்கத்திற்கு விளக்கேற்றி வைத்த விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அண்ணன் விஜயகாந்த்.
அரசியலுக்கு வரும் முன்பாகவே, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வரும் முன்பாகவே, தான் நேசிக்கும் தமிழ்நாட்டிற்காக பல சமயங்களில் லட்ச லட்சமாக நிதி உதவி அளித்தவர்.
தன் துறையில் தன்னோடு பணியாற்றிய ஊழியர்களுக்குக் கஷ்டம் என்றபோது கேட்காமலே பல உதவிகளைச் செய்தவர்.
இன்றளவிலும் தேமுதிக மாநாட்டுக்கு வந்த அளவிற்கான கூட்டம் யாருக்கும் கூடியதுமில்லை, முதல் தேர்தலிலேயே அறிமுகமான கட்சி 10.5 சதவீத வாக்கு வாங்கிய வரலாறு யாருக்கும் இல்லவும் இல்லை.
இது எல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும், பலமுறை சொல்லி ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
கேவலம் அரசியல் கட்சிகள் செய்த சூழ்ச்சி காரணமாக அவரை குடிகாரனென்று, கோபக்காரனென்று ஆத்திரக்காரனென்று மீடியாக்களிலும் சமூக வலை தளங்களிலும் மாறிமாறி அசிங்கப்படுத்திய போது அதைக் கண்டுகொள்ளாத உலகம் தானே இது.
ஆனால் உண்மையில் அவர்யார் என்பது அவர் இறந்த அன்று இந்த உலகம் உணர்ந்தது.
அவரை சொந்த அண்ணனாக, உறவாகக் கருதி எத்தனை எத்தனை மக்கள் கதறி அழுது கண்ணீர் விட்டார்கள் என்பதை நாம் பார்க்கத் தானே செய்தோம்.
அன்று அவரை அசிங்கப்படுத்தி அரசியல் செய்த கட்சிகள், இதோ இன்று அண்ணனின் பிறந்தாள், உத்தமனின் பிறந்தநாள் என்று கேவலமாக அவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறது.
அவர் பாணியிலேயே த்தூ என்று அவர்களின் மீது காறி உமிழத்தான் வேண்டும்.
அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர்களை மன்னித்தும் கூட இருப்பார். அப்படிப்பட்ட தங்கமனம் கொண்ட தர்மர் தானே!
ஆனால் அவரை இழிவுபடுத்தியவர்களின் மீதான் கொதிப்பு மக்களுள் இல்லாமல் இல்லை.
வேறு வழியின்றி அரசியல் சூழ்ச்சியின் காரனமாக அவர்களும் மாறி மாறி வாக்களிக்க வேண்டிய கட்டாயம்.
இந்த கேடுகெட்ட உலகம் வேண்டாமென்று தான் சென்று விட்டாயா தலைவா?
சொர்க்கத்தில் நிம்மதியாக இரு.
இன்று உன் பிறந்தநாளை அங்கேயும் கொண்டாடுவார்கள் என்பதை அறிவேன்.
உன் ரசிகன் மற்றும் அபிமானியின் அன்பு வாழ்த்துகள்.