Categories
கருத்து தகவல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

க்யா ச்சையியே?சர்க்கார் உத்யோக்?

க்யா ச்சையியே?

என்னாங்க தலைப்பு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி தோணுதா?

இல்ல, இருக்காது, நம்மில் பலருக்கும் இது இந்தி என்றும் இதன் அர்த்தம் என்ன வேண்டும் என்பதென்றும் தெரிந்திருக்கும். காரணம், இந்தியை நாம் பழகாவிட்டாலும் இந்தி நம்மோடு பழகி விட்டது.

தேவைக்காக நியாயமான முறையிலும், சில மோசடியான முறையிலும்.

அப்படி மோசடியாக நுழைந்த இந்திக்காரர்கள் கதை தான் இது.

ஆம் ஏற்கனவே, நாம் பல அரசு வேலைகளிலும், ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், நீட் தேர்விலும் தமிழ் மாணவர்களை விடப் போட்டியாளர்களை விட மற்ற மாநிலத்தவர்கள் அதிகம் வெற்றி பெறும் புள்ளி விகிதத்தையும், அங்கே நடக்கும் தேர்வு எந்த லட்சணத்தில் நடக்கிறது என்பதையும் அறியாமல் இல்லை.

ஒட்டுமொத்தமாக அவர்கள் அப்படித்தான் என்று சொல்லி விட முடியாது. அங்கேயும் நம்மை விட நேர்மையானவர்களும், கடுமையாக உழைப்பவர்களும் இருப்பது நிதர்சனம்.

ஆனால் அங்கே இருக்கும் திருட்டு கும்பலுக்கு மிக எளிமையாக உதவிகள் கிடைப்பதுபோல, இங்கே தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் நிதர்சனம்.

ஏனென்றால் நம்ம ஊர்க்காரனுக்கு நம்ம ஊர்க்காரன் முன்னேறவது பிடிப்பதில்லையே?

பணம் வாங்கிக் கொண்டு செய்யும் உதவியையும் வடக்கனுக்கே செய்து விடுகிறார்களோ என்னவோ? அதனால் தான் தமிழ்நாடு மின்வாரியத்திலும், க்யா பாய், எலட்ரிக் பில் ஹேக்யா, ஏக் அசார், அசார் அசார்.. அரே ஏக் தவுசன்ட்.. ஓ யார், இங்கிலிஷ் பி நகி ஆத்தா?
ஹிந்தி நகி ஆத்தா, இங்கிலிஷ் பீ நகி ஆத்தா தோ, க்யூம் இதர் ஆத்தா?

என்று இங்கிலிஷும் தெரியாம, இந்தியும் தெரியாம இங்க ஏன்டா வந்தேனு, அவன் இங்க வந்து உக்காந்துக்கிட்டு நம்மள பாத்து கேக்குது.

எதிர்காலத்தில் நீட் தேர்வில் வென்று இங்கே பணிபுரிய வரும் மருத்துவர்களும் இதே க்யா உவா தான்.

இன்று ஒரு செய்தி, சென்னையில் உள்ள மத்திய கல்வி நிறுவனமான NITTTR ல் அதாவது National Institute of Technical Teachers Training and Research (தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்). Multi tasking staff, அதாவது பல்நோக்குப் பணியாளர் வேலைக்கு 35 பேரை கணினி வழியான இணையவழித் தேர்வில் வெற்றி பெற்றதை வைத்துத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதில் தேர்வான ஒரு 6 பேர் எப்படியான ஆட்கள் என்றால், என்னா பாய் கம்ப்யூட்டர் குள்ளே வின்டோ இருககுதுனு சொல்லுச்சு, ஆனா காத்து வரலே, ஒரு வேளை விட்டு பூட்டி இருக்குதானு கேட்டுருக்காங்க.

சந்தேகமே இல்லை, கண்டிப்பாக திருட்டு தான் என்று உணர்ந்த NITTTR நிறுவனம், காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் பாணியில் ஒரு குஜராத்தி தாளி பரிமாறப்பட்ட உடன் உண்மை வெளிவந்திருக்கிறது.

இவர்களுக்காக வேறு ஆட்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதில் இருவர் ரயில்வே பொறியாளரும், பணியாளரும், இன்னொருவர் பள்ளி ஆசிரியர். இந்த ஆள்மாறாட்டத்துக்காக சில லட்ச ரூபாய் கட்டணம்.

நடந்த இந்த நிகழ்வைப் பார்த்தால் இது ஏதோ தொன்றுதொட்டு நிகழும் வியாபாரம் போலத்தான் தெரிகிறது.

தீர விசாரிக்கப்பட்டு, இவர்களைப்போல திருட்டுத்தனம் செய்து வேலைக்குச் சேர்ந்த ஆட்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
நியாயமான முறையில் படித்து வென்றவர்களுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும்!

க்யா பாய்! ஷகி ஹேனா?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.