காற்றில் பறக்கும் வாக்குறுதிகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவ்வளவு ஏன், நீ சொல்றத தண்ணியில தான் எழுதனும் னு பேச்சுவாக்கில் கேலி பேசுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அது நிஜத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?
நிகழ்ந்து தான் விட்டது.
உங்களைத் தேடி ஸ்டாலின் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, மருத்துவ காப்பீடு துவங்கி பல வகையான பிரச்சினைகளையும் மனுக்களாகப் பெற்று உடனடியாகத் தீர்வு தருகிறோம் என்று இந்த ஆளும் திமுக அரசு செய்த மாபெரும் வெற்றித் திட்டத்தில், மக்களால் முதல்வருக்கு நேரடியாக அளிக்கப்பட்ட மனுக்கள் சில திருபவனம் வைகை ஆற்றில் மிதந்து வந்த செய்தி தான் இப்போது பரபரப்புப் பேச்சு.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிர்சினை தீர்க்கப்பட்டு விட்டது என்றும், பதில் போடப்பட்டது என்றும், மிதந்து வந்ததில் கொடுப்பட்ட மனுவும், பதில் மனுவும் சேர்ந்தே இருந்ததாகவும் ஏதேதோ கதைகளைச் சொன்னாலும் சரி, இது இன்னொருவனின் பிரச்சினை.
அதாவது ஒரு குடிமகனின் கோரிக்கை.
அதை எப்படி வெளியே ஆற்றில் வீசக்கூடும்?
2026 தேர்தலை நோக்கிய மிகப்பெரிய முன்னேற்ற நகர்வு, இந்த சம்பவத்தின் மூலமாக மக்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.
சத்தியமாக தவறு திமுக மீதானது அல்ல என்பதை உணரலாம். அவர்கள் அந்த மனுக்களை வேண்டாமென்று நினைத்திருந்தால் இந்த வகையில் ஆற்றில் விட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் மாட்டிக் கொள்வோம் என்று தெரியுமே?
இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட அரசு அலுவலர்கள், அதிக பணிச்சுமை காரணமாக விரக்தியடைந்து இவ்வாறு செய்திருக்கலாம்.
அல்லது திமுக வின் பெயரைக் கெடுக்க விரும்பும் யாராவது இதைச் செய்திருக்கலாம்.
இதைச்செய்தது யார் என்பதைக் கண்டறிந்து அவருக்குத் தக்க தண்டனை தரும்பட்சத்திலே தான் இந்த அவப்பெயர் நீக்கும்.
நாமும் பார்க்கலாம், அந்த விஷ வண்டு எது என்று?
சகுனி என்ற படத்தில் கதாநாயகன் கார்த்தி கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு தனது மனுவை மந்திரியிடம் கொடுத்து விட்டு சந்நோஷமாக எதிர் கடையில் வந்து பஜ்ஜி சாப்பிட பிடிகாகிதம் வாங்குவார். அதைப் பார்த்தால் அது அவர் கொடுத்த மனு.
அதைப்போல இந்த சம்பவம், மக்களின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது. ஆனால் அந்த அலட்சியம் யாருடையது? என்பது தான் புதிர்.
அல்லது இது திட்டமிட்ட சதியா?
பார்க்கலாம்.