Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடி கதைகள்- தொடர்ச்சி

இணையதளம். இன்றைய தேதியில் 100 ல் 60க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு தன் கை கால், மூளை போல இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இணையதளம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, பொழுதுபோக்கு ஊடகங்களில் துவங்கி தகவல் ஊடகங்கள் வரை அனைத்தும் தான். இவை அனைத்தும் இந்த அளவிற்கு உபயோகத்தில் இருப்பதற்குக் காரணம், இவை கைபேசயிலேயே கிடைப்பது தான் இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் அவர்கள் செல்லும் வசனம் போல, முதன் முதலாக ராக்கெட் அனுப்ப உபயோகப்படுத்தப்பட்ட […]

Categories
சினிமா

மதராஸி- திரை விமர்சனம்

என்ன சொல்கிறார் மதராஸி?மதராஸி என்பது நாம் இந்தி பேசும் மக்களை வடக்கன் என்று சொல்வது போல, இந்தி பேசாதவர்களை அவர்கள் அழைக்கும் பெயராகும். இப்போதெல்லாம் அது வழக்கொழிந்து விட்டது.ரொம்ப பழைய பெயர் இந்த மதராஸி என்பது. ஒருவேளை படத்திலும் புதிதாக பெரிய சரக்குகளைக் களமிறக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்வதற்காகத் தான் இந்த மதராஸி என்ற பெயரை முருகதாஸ் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே முழுமையாகக் குறை சொல்வது போல இருந்தாலும், உண்மை அதுதான். ஒரு […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடிகள் பலவிதம்!

மோசடி என்பது இன்று நமது வாழ்க்கையில் யதார்த்தமான ஒன்றாகவே மாறிப்போனது. முன்பெல்லாம் மோசடிகளைக் கண்டு முகம் சுளித்த நாம், இப்போது அதை மிக யதார்த்தமாக, ஓ அப்படியா என்று கடந்து போகத் துவங்கி விட்டோம். போதாக்குறைக்கு மோசடிப் பேர்வழிகளை கதாநாயகர்களாக சித்தரித்துப் பல படங்கள் வருகின்றன. மோசடி செய்பவர்கள் அல்லது திருட்டுத்தொழில் செய்பவர்களைக் கோமாளிகள் போல பாவித்து பல நகைச்சுவை காட்சிகளையும் யதார்த்தமாக ரசித்துப் பழக விட்டோம். அதாவது ஒருவனின் பணத்தை ஒருவன் மோசடி செய்வதை வயிறு […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

இரத்தத்தில் கலந்தது சினிமா!

சினிமா . இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று சினிமா. வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதோடு அல்லாமல், கோடி கோடியாகப் பணம்புரளும் ஒரு பெரிய துறையும் கூட. இந்தத் துறையின் தொழில் வாய்ப்பைய நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளிகள் உண்டு என்பதிலும் மாற்றமில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கதாநாயகன், நாயகி, இயக்குனரில் துவங்கி , தினக்கூலி பெற்றுக் கொண்டு லைட் பிடிக்கும் லைட் மேன் வரை சினிமா என்ற தொழிலை நம்பி இருப்பவர்கள் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டும் மீண்டுமா? சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

சுங்கச் சாவடி கொள்ளை பற்றி நாம் முன்னரே ஒரு கட்டுரை விரிவாக எழுதியிருக்கிறோம். நமது கட்டுரையில் எழுதப்பட்ட பல சாராம்சங்களின் அடிப்படை மாறாமல் இன்று ஒரு தினசரி நாளிதழில் தலையங்கத்தில் சமீபத்திய சுங்கச் சாவடி கட்டண உயர்வு பற்றியும், மற்ற ஒளிவு மறைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. முதல் விஷயம், முக்கியமான விஷயம் என்னவென்றால் சுங்கச்சாவடி என்பது நெடுஞ்சாலைகளில் 60 கிமீ தொலைவிற்கு ஒன்றுதான் இருக்க வேண்டும்.அந்த வகையில் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சுங்கச் சாவடிகள் தான் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வார்த்தைய விடலாமா எடப்பாடி சார்?

இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]