மோசடி என்பது இன்று நமது வாழ்க்கையில் யதார்த்தமான ஒன்றாகவே மாறிப்போனது.
முன்பெல்லாம் மோசடிகளைக் கண்டு முகம் சுளித்த நாம், இப்போது அதை மிக யதார்த்தமாக, ஓ அப்படியா என்று கடந்து போகத் துவங்கி விட்டோம்.
போதாக்குறைக்கு மோசடிப் பேர்வழிகளை கதாநாயகர்களாக சித்தரித்துப் பல படங்கள் வருகின்றன.
மோசடி செய்பவர்கள் அல்லது திருட்டுத்தொழில் செய்பவர்களைக் கோமாளிகள் போல பாவித்து பல நகைச்சுவை காட்சிகளையும் யதார்த்தமாக ரசித்துப் பழக விட்டோம். அதாவது ஒருவனின் பணத்தை ஒருவன் மோசடி செய்வதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நம்மை ரசிக்க வைத்து விட்டார்கள்
அந்த அளவிற்கு நாம் மோசடிகளை அன்றாட நடைமுறையாகப் பழகிவிட்டோம்.
பல விதங்களில் இன்று மோசடிகள் நிகழ்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஒரு விதமான புதுக்கதைகளை அறிய முடிகிறது. அப்படியொரு தினுசான மோசடிக் கதை பற்றி சமீபத்தில் அறிய நேர்ந்தது.
அதைப்பற்றிய விளக்கம் தான் இது.
திருமணத்திற்கு வரன் தேடுதல் என்பது முன்பெல்லாம் சொந்த பந்தங்களை வைத்து ஆங்காங்கே சொல்லி வைத்து ஆள் தேடி நிகழ்ந்தது. பிறகு இடைத்தரகர்களை வைத்துத் தேடி நிகழ்ந்தது.
அதன்பிறகு காலத்திற்கு ஏற்ப கணினிமயமாக இந்தத் தொழிலும் மாறிப் போனது.
இப்போதெல்லாம் கணினி வழியாகவோ அல்லது அலைபேசியில் செயலிகள் வழியாகவோ பல வரன்களைப் பார்க்க முடியும். அதற்காக அந்த செயலி நிறுவனத்திற்கு நாம் ஒரு கனிசமான தொகையைத் தரவேண்டும்.
இதில் வழக்கமாக நிகழும் மோசடி என்னவென்றால், நம்மை அந்தச்செயலியை விட்டு வெளியேறாமல் வைத்திருப்பதற்காக அந்தச் செயலி நிறுவனமே, போலியான தகவல்களை அளித்து சில வரன்களையும், ஏற்கனவே திருமணம் ஆனவர்களையும் வரன்காளாகவே கணக்கு காண்பித்து மோசடி நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு.
இதைத்தாண்டி எனது நண்பருக்கு நடந்த சிறிய சம்பவம். இதேபோல் செயலியில் வரன் பார்க்கும் போது அவருக்கு ஒரு பெண்ணின் ஜாதகமும் புகைப்படமும் பிடித்திருந்த காரணத்தினால் அந்தப் பெண்ணிடம் கூடுதல் தகவல் கேட்டு அனுப்பியிருக்கிறார்.
அந்தப் பெண்ணோ இவரிடம், தன்னைப் பற்கி அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு ஒரு தங்கை இருப்பதாகவும், அவளின் படிப்பு செலவுகளைத் தான் வேலைக்குச் செல்லும் பணத்தை வைத்து சரிபார்த்துக் கொள்வதாகவும், தனக்குத் திருமணமாகி விட்டால் பிறகு அவளுக்குப் படிப்புச் செல்லவு செய்ய ஆள் இல்லை, அதனால் நீங்கள் ஒரு கனிசமான தொகையை அனுப்பினால் நான் அவளின் செலவை சரிகட்டி விட்டு உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்.
இப்போது எனக்கு உடனடித் தேவை இருக்கிறது. பணல் தந்தால் நான் நமது தருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் சென்று அதை திரும்ப அடைத்து வடுகிறேன் என்று பேசியருக்கிறார்.
அட்ரா சக்க. பலே கில்லாடி தான் போ, எனக்குக் கல்யாணமே வேணாம்டா சாமி ஆள விடுமா என்று ஓடி விட்டாராம்.
இந்தக் காலத்தில் கூடப் பழகியவர்களிடமே பணம் கொடுத்து விட்டுத் திரும்ப வாங்குவது பெரும் பாடாக இருக்கிறது. இதில் தெரியாத பெண்ணிடம் பணம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா?
ஆனால் பாவம், சில அப்பாவிகள் இப்படியாவது நமக்குத் திருமணம் ஆகுமா என்று அந்த மாதிரி பணம் கொடுத்து ஏமாறத்தான் செய்வார்கள்.
அவர்களைத் தான் நாம் சினிமாவில் வரும் நகைச்சுவை போல கேலி பண்ணி சிரிப்போமே?
காலம் அப்படி இருக்கிறது.
உஷாராகத் தான் வாழ வேண்டியுள்ளது.