Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எல்லாம் 🍋 எலுமிச்சை பழத்தின் மகிமை

நாம் வழக்கமாக அடிக்கடி பேசும் விஷயம் தான். விஷயமும் பழையது தான்.

மூடநம்பிக்கை.
அதை மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விதத்தில் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சிக்கும் விதத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் கண்களில் படுகிறது அல்லது காதுகளில் கேட்கிறது.

எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய பிறகும் இன்னமும் மூடநம்பிக்கை என்பதை நாம் பின்பற்றுவது என்பது நமக்கு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

உதாரணத்திற்கு, விவேக் அவர்கள் ஒரு நகைச்சுவையில், “என்னடா லாரிக்கு அடியில எலுமிச்சை 🍋 பழம் தொங்குது?” என்று கேட்க, அந்த லாரியின் க்ளீனிரோ, “லாரி நல்லா ஓடத்தான்” என்று சொல்வார். உடனே விவேக், “அடப்பாவிகளா, உள்ள இருக்கிற 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சை 🍋 பழத்துல ஓடப்போகுது?“ என்று கேலியாக சொல்வார்.

அது கேலி அல்ல, உண்மை என்று நமக்கும் தெரியும்.
ஆனால் நமது மூடநம்பிக்கை என்ன?
எலுமிச்சை 🍋 பழத்தை வண்டி டயரில் வைத்து நசுக்கியோ அல்லது வண்டியில் கட்டி தொங்க விட்டாலோ, கெட்ட சக்திகள் வண்டியின் ஓட்டத்தை பாதிக்காது, கறுப்புக் கயிறு கண் திருஷ்டியைக் குறைக்கும் என்பது.

நாமும் என்ன செய்வோம், அட 10 ரூ எலுமிச்சை பழத்துனால, நமக்கு மனக்குறை ஏற்பட வேண்டாமே, கழுதய நசிக்கி விட்டுட்டுப் போவோம், நமக்கு என்ன நஷ்டமா?

ஒருவேளை அதைச்செய்யாமல் சென்று ஏதாவது ஆனால், இந்த சம்பிரதாயக்காரர்கள் நம்மை சும்மா விடுவார்களா? காதிலேயே செய்து விடுவார்கள் தானே என்று சலித்துக் கொண்டோ, விரும்பாவிட்டாலும் கூட அதைச் செய்து விடுகிறோம்.

சரி அதைச்செய்வதால் பத்து ரூபாயோடு ஒழிந்து போனால் பரவாயில்லை.
இந்த சம்பவத்தைப் பாருங்கள்.
இது சாங்கியம் செய்த சம்பவம்.

புதிய தார் ரக மகிழுந்தை வாங்கிய தம்பதி அந்த வாகனத்தை எலுமிச்சை 🍋 பழத்தில் ஏற்றி விட்டு, விற்பனை நிலையத்திலிருந்து வெளியே எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

மகிழுந்து (கார்) நிறுத்திவைக்கப்பட்டிருந்த்து தரையிலிருந்து பதினைந்து அடி உயரத்தில்.
அழகுப்பார்வைக்காக இப்போதெல்லாம் அது மாதிரியாகத்தான் விற்பனை நிலையங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

புதிய வாகனத்தை முதன்முதலில் தன் ராசிக்கார மனைவி இயக்க வேண்டும் என்று அந்தக் கணவர் விருப்பப்பட, மனைவி வாகனத்தை இயக்க, புதிய கார் வாங்கிய ஆர்வத்தில், முடுக்கியை அதாவது accelerator ஐ ஓங்கி மிதிக்க, கார் கண்ணாடியை உடைத்து கொண்டு பதினைந்து அடி கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்து விட்டதாம்.

ஆனால் வைக்கப்பட்ட 4 🍋 எலுமிச்சை பழங்களும் முறையாக நசுக்கப்பட்டு விட்டதாம்.

இப்போது சமூகம் என்ன சொல்கிறாதாம், அந்த 4 🍋 எலுமிச்சை பழங்களும் நசுக்கப்பட்ட காரணத்தால் தான் அந்த தம்பதி சிறிய காயங்களோடு தப்பித்தார்களாம். எல்லாம் எலுமிச்சையின் மகிமையாம்!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.