கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.
இது.
இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும்.
லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே?
ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் அந்த வகையிலான மிருகங்கள் கை இல்லால் படைக்கப்பட்டிருக்கலாம்.
மேலும் அசைவப்பிரியர்களை நோக்கி இந்தத் திருக்குறளை ஒப்புவத்து சைவமாக மாறச்சொல்பவர்கள் எல்லாம் மீதி இருக்கும் ஆயிரத்து இருபத்து முன்னூற்று இருபது குறளின் வழி தவறாமல் நடப்பவர்களா என்றால் நிச்சயம் இல்லை.
இதைவிட முக்கியமான ஒன்று இது துறவறஙயலில் வரும் திருக்குறள்.
இதை சாதாரண மனிதர்களுக்காக , சம்சாரிகளுக்காக திருவள்ளுவர் எழுதவில்லை.
துறவிகளுக்காக எழுதியிருக்கிறார்.
நாமும் ஒருவேளை துறவியாக மாறும் பட்சத்தில் புலாலை மறுத்து விடலாம்.
புலால் உண்ணுதல் பாவம் என்றால் சிங்கம் புலி எல்லாம் ஏன் படைக்கப்பட்டது?
அடுத்த கதைக்கு வரலாம்.
அறிவியல் ரீதியாக மனிதன் அசைவம் உண்பதற்காகப் படைக்கப்படவில்லை என்று சொல்பவர்கள் கூறும் கருத்து.
மிருகங்களுக்கு கூர்மையான பல் இருக்கிறது , அது அசைவம் உண்பதற்காகப் படைக்கப்பட்டது.
மனிதனுக்குக் கூர்மையான பல் இல்லை என்பது அந்தக் கருத்து.
அதாவது மிருகங்களுக்குக் கூர்மையான பல் இருப்பது மாமிசம் உண்பதற்காக, மனிதனுக்கு அப்படியான கூர்மையான பல் இல்லாதது மாமிசம் உண்ணக்கூடாது என்பதற்காக என்று கதையடிப்பார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், மிருகங்களுக்குக் கூர்மையான பல் இருப்பது மாமிசத்தின் பச்சைக்கறியை பிய்த்து உண்பதற்கு..
நமக்கு பச்சைக்கறியைப் பிய்த்து உண்ண அவசியமில்லாத காரணத்தால் கூரிய பற்கள் இல்லை.
நாமதான் சின்ன சின்ன பீஸா வெட்டி வாங்கிருவோமே?
இன்னொரு அறிவியல் ரீதியான காரணம் என்ன சொல்வார்கள் என்றால் மிருகங்களுக்கு இருக்கும் குடல் அமைப்பு அசைவத்தை செரிமானம் செய்வதற்காக, என்றும் மனிதனின் குடலமைப்பு மாமிச செரிமானத்திற்காக அல்ல என்பதும்.
திரும்பவும் அதே கதைதான்.
மிருகங்களுக்கு பச்சை இறைச்சியை செரிப்பதற்கான குடலமைப்பு.
மனிதனுக்கு சிக்கன் சாப்ஸ், சிக்கன் 65, மட்டன் கோலா உருண்டை, மட்டன் குழம்பு போன்றவற்றை செரிப்பதற்கான குடலமைப்பு.
தயவுசெய்து யாரும் மாமிசத்தை வேகவைக்காமல் உண்ணாதீர்கள்.
அடுத்த கதை புரட்டாசி மாதம் பூமி குளுபை அடையும் காரணத்தால் என்ற வாட்ஸ் அப் செய்திகள்.
முன்னாடி சொன்னதற்கே அறிவியல் விளக்கங்கள் இல்லை என்கிற போது இந்த புரட்டாசி கதை எல்லாம் வெறும் பேய்க் கதை தான்.
கடவுளின் மீது பக்தி இருந்தால் வெளிப்படையாக கடவுளின. மீதான பக்தியால் இந்த மாதம் நான் அசைவ விரதம் என்று வெளிப்படையாக சொல்லவிடலாம்.
அதற்காக வெட்கப்பட்டுக்கொண்டு பெரிய விஞ்ஞானிகள் போல, புரட்டாசி மாதம் பூமி குளிர்கிறது, பூமா தேவி தலைக்கு குளிக்கிறது அதனால் அசைவம் செரிமானம் ஆகாது என்று பேய்க்கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
புரட்டாசி அமாவாசை மற்றும் சனிக்கிழமை ஸ்பெஷல்.
அசைவப் பிரியர்களுக்காக!