இணையதளம்.
இன்றைய தேதியில் 100 ல் 60க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு தன் கை கால், மூளை போல இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இணையதளம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, பொழுதுபோக்கு ஊடகங்களில் துவங்கி தகவல் ஊடகங்கள் வரை அனைத்தும் தான்.
இவை அனைத்தும் இந்த அளவிற்கு உபயோகத்தில் இருப்பதற்குக் காரணம், இவை கைபேசயிலேயே கிடைப்பது தான்
இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் அவர்கள் செல்லும் வசனம் போல, முதன் முதலாக ராக்கெட் அனுப்ப உபயோகப்படுத்தப்பட்ட கணினிகளை விட இப்போதைய கைப்பேசிகள் 1000 மடங்கு திறன் பெற்றவை.
இவற்றை நல்ல விதத்தில் உபயோகிக்கிறோமோ என்றால், 100ல் 80 சதவீதம் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்பதும் நிதர்சனம்.
மேலும் உபரியான இதன் பயன்பாடு , மோசடிகளுக்கும் வித்திடுவது உண்மை.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி.
முகநூலில் தோழியாகப் பழகி நேரில் ஓரிரு முறை சந்தித்துப் பிறகு தன் சகாக்களுடன் இணைந்து தொழிலதிபரைக் கடத்திய கும்பல் .
இது ஒரு வகையான திருட்டு.
இன்னொரு வகை திருட்டு என்பது, நமது அலைபேசியை வசப்படுத்தி, அதலிருந்து பணத்தை , தகவலைத் திருடுவது.
கார்டு மேலே பதினாறு நம்பர் சொல்லுங்க சார் என்கிற வடக்கன் டீம் எப்படி இவ்வளவு வளர்ச்சி பெற்றார்கள் என்ற ஆச்சரியம்
ஆனால் அதன் பின்னனி உண்மை கிடைத்த பிறகு தூக்கி வாரிப்போட்டது.
சமீபத்தில் நடந்த கதை.
மும்பையைச் சார்ந்த ஒரு பட்டதாரி இளைஞர்.
கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்.
அவருக்கு ஏதோ ஒரு இணைய தளம் வழியாக வெளிநாட்டுப் பெண்/ ஆணின் தொடர் நட்பு கிடைத்திருக்கிறது.
அவர்கள் மூலமாக நல்லதொரு வெளிநாட்டு வேலைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் முறையாக வேலைக்கான உத்தரவாதம், அலுவல் ரசீதுகள் எல்லாம் அந்த நாட்டிற்கு வந்த பிறகு தான் கிடைக்கும் என்பதால் கப்பலில்/ படகில் கம்போடியா/ வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வரச்சொல்லி பிறகு அங்கிருந்து ஏற்பாடுகள் நிகழும் என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
இவரும் சரி, நம்மிடம் பணம் கேட்காத காரணத்தால்,இது ஏமாற்று கும்பல் அல்ல என்று நினைத்துக் கொண்டு படகு ஏறிச்சென்றிருக்கிறார்.
அதன்பிறகு தான் தெரிந்திருக்கிறது.தான் முறையான வேலைக்கு வரவில்லை.
தாய்லாந்து/கம்போடியா/வியட்நாம் போன்ற நாடுகளில் தங்க வைக்கப்பட்டு இணைய மோசடி செய்து
பணம் திருடும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.
இவர் உட்பட பல இளைஞர்களும் இவ்வாறான வலையில் சிக்கிக் கொண்டிருப்பதை அறிகிறார்.
தங்களுடைய கடவுச்சீட்டு மாட்டிக் கொண்டதால் வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டிய கட்டாயம்.
எப்படியோ தந்திரமாகத் தன் வீட்டுக்கு இந்தத் தகவலை சொல்லி விட்டார்.அவர்கள் மும்பை போலீஸில் சொல்லி அந்த நாட்டு தூதரகத்தில் பேசி இதுமாதிரி அழைப்பகள்,வேலை வாய்ப்பு என்று மாட்டிக் கொண்டிருந்த இறைஞர்கள் மீட்கப் பட்டார்கள்
படிக்காதவர்களை ஏமாற்றி ஒட்டகம் மேய்க்க அனுப்புவது போல, இப்போது படித்த இளைஞர்களைக் குறிவைத்து இதி்மாதிரி தினாசான மோசடி நிகழ்கிறது.
உஷார்.