Categories
சினிமா

சன் டிவி வராதா?

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியல் தடபுடலாகத் தயாராகி விட்டது.
ஒரு புறம் சரத்குமார், மேடையேறி சாகசம் செய்து விளம்பரம் செய்கிறார், மறுபுறம் வளர்ந்து வரும் நடிகர், ஏன் எங்க படமெல்லாம் தீபாவளிக்கு வரக்கூடாதா?

நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் எந்த சினிமாவும் மக்களுக்குப் பிடிக்கும் என்று மன உறுதியுடன் பேசியிருக்கிறார்.

இன்னொரு புறம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள், மீண்டும் தனது பாணியில், தெக்கத்தி கபடி விளையாட்டு வீரர் , அர்ஜூனா விருது பெற்ற வீரரின் வாழ்க்கையை மனதில் வைத்து, தன்னுடைய பாணியில் தனது ஆத்மார்த்தமான கற்பனையில் கபடி விளையாட்டு பற்றியும், பல இளைஞர்களின் கனவு பற்றியும் எடுக்கப்பட்ட படம் என அறிக்கை விட்டிருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தின் தலைப்பை காளமாடன் என்று வைக்க நினைத்ததாகவும், தனது திரைக்கதைப் புத்தகத்தில் இன்னும் கூட அந்தப் பெயரே தான் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

தீபாவளி வெளியாகும் படங்களின் தலைப்புகளாவன,

Bison, Dude, Diesel.

இந்தத் தலைப்புகளில் எதுவுமே தமிழில் இல்லை.

தமிழில் தலைப்பு வைத்தால் என்ன? என்று ஒரு சாரார் விமர்சனம் வைக்கத் தான் செய்கின்றனர்.

இந்தத் தலைப்புகளைத் தமிழில் வைத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்,
Bison- காளமாடன், Dude- (நண்பன், பகட்டன், ஒய்யாக்காரன்) ,
Diesel- வளியெண்ணெய், வளிநெய்

படத்தின் பெயர்கள் ஒய்யாக்காரன், வளிநெய் என்றெல்லாம் இருந்தால் கேலியாக அல்லவா இருக்கும்?

அதற்காகத்தான் style ஆக Bison, Dude,Diesel என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அவர்களைக் கடிந்து கொள்வது சரியல்ல தானே?

ஆனால் பாருங்களேன் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொன்ன போது இந்த style எல்லாம் பின்பற்றப்படவும் இல்லை.
அதேசமயம் தேடித் தேடி தமிழ் வார்த்தைகளைக் கண்டறிந்து படத்திற்குத் தலைப்பு வைக்கவும் செய்தார்கள்.

உதாரணம் ரோபோ என்று இருக்க வேண்டிய பெயர் எந்திரன் என்று இருந்தது.
ரோபோவுக்கு ஈடான தமிழ் வார்த்தை இது தானா என்று நாம் அறிவதற்கும் காரணமாக இருந்தது அந்தப் படம் தான்.
அதுவரை நாம் ரோபோக்களை ரோபோ என்றே அழைத்திருந்தோம்.

ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் சரி , கேவலம் அந்த 8-10 சதவீத வரியில் விலக்கு கிடைப்பதற்காக தமிழில் பெயர் வைத்துத் தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு என்று கொண்டாடிய சினிமா உலகம், இன்று ம..ரே போச்சு என்று தங்கள் விருப்பத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது இவர்களின் தராதாரம் என்ன என்பதை உணர்த்துகிறது.

என்னதான் காறி உமிழ்ந்தாலும் இந்த வரிவிலக்குக்காக வேடமிடம் பரதேசிகளோடு தான் நாம் பயணிக்க வேண்டி உள்ளது.

பார்த்துத் தொலையலாம், என்ன செய்வது, நமக்கும் வேற வழியில்லையே!

Anyway Advance Happy Diwali.😁

மன்னிக்கவும்,

Advance happy diwali ( முன்கூட்டிய சந்தோச தீபாவளி)

ஆங்கிலத்தை நேரடியாக தமிழாக்கம் செய்தால் இப்படித்தான் தகராறு.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.🙏🏼

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.