சமீபத்தில் ஒரு காணொளி காட்சியைக் காண நேர்ந்தது.
ஒரு பெண் அரசு அதிகாரி, தன்னை அணுகி ஏதோ பணி நிமித்தமாக வந்திருந்த ஒரு நடுத்தர மதிப்புள்ள வயது மிக்க ஆறு, அதுவும் அந்தப் பெண்ணை விட வயதில் அதிகமான ஆளை நிற்க வைத்துக் கொண்டே வெகு நேரமாக , தனக்கு என்ன உணவு வேண்டும், தனது பணியாளர்களுக்கு என்ன உணவு வேண்டும், தனது வண்டி ஓட்டுனருக்கு என்ன உணவு வேண்டும் என்று நீளமான பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த நபரோ பாவம் போல, வெகு நேரமாக அந்தப்பெண் அதிகாரி பேசி முடிப்பாரா என்று காத்துக் கொண்டிருந்தார்.
இதை யாரோ படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்கள்.
அந்தப் பதிவின் கீழே பலரும் அந்தப் பெண் அதிகாரி செய்த விஷயத்தைக் கண்டித்து தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள்.
ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்கள்.
ஒருவேளை மதிய உணவு இடைவேளையில் அந்தப் பெண் அதுமாதிரி பேசியிருக்கலாம் என்று.
அடேங்கப்பா, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்ற ரீதியில் தான் அவர்கள் பேசியது இருக்கிறது.
ஒரு அரசு அதிகாரி தனது மதிய உணவு இடைவேளையில் பொது மக்களுக்காக வேலை செய்தார் என்பதை ஆதார் கார்டு வாங்காத குழந்தை கூட நம்பாது.
அந்த அதிகாரி அவரை விட வயதில் அதிகமான அந்த நபரை பார்த்து எழுந்து நின்று மரியாதை தர வேண்டாம்.பொது மக்களின் வரிப்பணத்தில் தானே நாம் சம்பளம் வாங்குகிறோம் என்று அவருக்கு சிறப்பு மரியாதை ஏதும் தர வேண்டாம்.
ஆனால் ஒருவர் வந்து கால்கடுக்க தன் முன்னே ஏதோ ஒரு பிரச்சினைக்காக நிற்கும் போது, அவரைக் கண்டுகொள்ளாமல், அவருக்கு அந்த சாப்பாடு இவருக்கு இந்த சாப்பாடு , நல்லதங்காள் ல் ல சிக்கன் வறுவல் னு சொல்லி போன் பேசுறது அவருக்கு எவ்வளவு மன வேதனை தரும்?
அவரைக் கொஞ்ச நேரம் வெளியே இருக்கச் சொல்லியாவது இருந்திருக்கலாம்.
அரசு வேலையில் சேர்ந்து விட்டால் நாமதான் ராஜா, ராணி என்ற எண்ணம் பிறந்து விடும் கோல
இவரைப் போன்ற ஆட்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படாமல் இதெல்லாம் ஓயாது.



