மட்டைப்பந்தாட்டம் அதாவது கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.
அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வீரர் அல்லது ஜோடிக்கு பெரும் ரசிகர் படையே இருந்து வந்திருக்கிறது.
90 களில் பிறந்த குழந்தைகளுக்கு சச்சின்- கங்குலி,
சச்சின் – சேவாக்,
டிராவிட் ( எல்லோரோடும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் வீரர்)
ராபின் சிங்- அஜய் ஜடேஜா
சிறிது காலத்திற்குப் பிறகு
தோனி, கம்பீர்,யுவராஜ் சிங், போன்ற வீரர்களுக்கு பெரிய ரசிகர் படை இருந்தது.
ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய ஜோடிப்புரட்சி , அதாவது சச்சின்-கங்குலி போல ஒரு ஜோடி ஆட்டக்காரர்கள் அமைவதற்கு சிறிது காலம் பிடித்தது.
அந்த சமகாலத்தில் ஆடத்துவங்கி அந்த இடத்தை நிரப்பியது
ரோஹித் சர்மா- விராட் கோலி ஜோடி.
தோனி காலத்திலும் அதற்குப் பிறகும் இந்த ஜோடி தொடர்ச்சியாக இந்திய அணிக்காக பல சாதனைகளைப் புரிந்தது.
கடந்த ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற ரசிகர்களின் நம்பிக்கைக்கு அஸ்திவாரமே இந்த ஜோடி இருந்த நம்பிக்கை தான்.
எல்லாம் சரியாகத்தான் போனது.
ஆனால் இறுதிப்போட்டிநில் ஆஸ்திரேலிய அணியிடம் ஏமாந்து தோல்வியைத் தழுவினோம்.
இந்த ஜோடிக்கு ஒரு நல்ல பரிசு கிடைக்காமலே போய் விடுமோ என்ற ஆதங்கம் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் தீர்ந்தது.
தென் ஆப்பிரிக்காவின் முயற்சிகளை துவம்சம் செய்து கோப்பையைத் தட்டித் தூக்கியது இந்திய அணி.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக் கோப்பைக் கைப்பற்றிய களிப்போடு இந்த ஜோடி 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து அதிர்ச்சியும் அளித்தது.
அதற்குப்பிறகு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இவர்களை ரசிக்க முடியும் என்ற ரசிகர்களின் மனக்குறை எனும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்திய அணியின் கோப்டன் பதிவியிலிருந்து ரோஹித் சர்மா தரமிறக்கப்பட்டார்.
அடுத்த ஒரு நாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரில் அவர் கோப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்காகக் கோப்பையை வாங்கித் தருவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டது.
இனி ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டது.
உடல் தகுதி இல்லை வயதாகிவிட்டது என்றால்லாம் ஆங்காங்கே பேச்சு எழுந்தது.
இதையெல்லாம் நிரூபிக்கும் விதமாக இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 0 மற்றும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களையும் இந்திய அணியையும் ஏமாற்றியது.
சற்று சுதாரித்துக் கொண்ட ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் ஓரளவு ரன் சேகரித்தலும் கூட, கோலி மீண்டும் ரன் ஏதும் எடுக்காம் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றானார்.
இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியுற்று தொடரையும் இழந்தது.
இன்றைய மூன்றாவது போட்டியில் ஆட்டத்தை இழந்தால் ஒரு தொடரை முழுமையாக இழந்த அவப்பெயர் இந்திய அணிக்கு
ஆனால் இன்று நடந்து கதை வேறு.
ரோ- கோ ஜோடி தன் ஆட்டத்தை ஆடியது.
சிங்கம் கர்ஜித்தால் காடு அலறும் என்று நிரூபித்தது.
ரன் மிஷின் ,சேஸ் மாஸ்டர் கிங் கோலி சச்சினுக்கு அடுத்த படியாக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றார்.
இத்தனைக்கும் சச்சினின் சராசரியை விட கோலியின் சராசரி பத்து ரன்கள் அதிகம்.
அதாவது அவரை விட மிகக் குறைவான ஆட்டங்களில் இந்த ரன்களை சேகரித்திருக்கிறார்.
மேலும் தனது 75 ஆவது அரை சதத்தையும் பூர்த்தி செய்திருக்கிறார்.
அந்தப்பக்கம் ஹிட்மேன் சர்மா சதமடித்து உலகளாவிய போட்டித்தொடர்களில் தனது 50 ஆவது சதத்தை எட்டினார்
இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடி 236 என்ற இலக்கை அடைந்து தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக்கிறது.
2027 உலகக் கோப்பைத் தொடரில் இவர்களின் இருப்பு அவசியம் என்பதை இன்றைய ஆட்டத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறது.
வயசானாலும் உன் அதிரடி குறையல என்று ரசிகர்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்
நாமும் நமது சார்பாக இந்த சிங்கங்களைப் பாராட்டி மகிழ்வதோடு 2027 ல் இவர்களின் அதிரடி ஆட்டத்தைக் காண ஆவல் கொண்டிருக்கிறோம்.


