Categories
சினிமா

பைசன்- திரை விமர்சனம்

பைசன்- காளமாடன் யாரை முட்டுகிறார்? பார்க்கலாமா? கபடி விளையாட்டில் அர்ஜூனா விருது வென்ற திரு.மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, தனது கற்பனையை சிறிது சேர்த்து, தென் மாவட்டத்தில் பிறந்து சாதியக் கொடுமைகளால் வஞ்சிக்கப்படும் பல இளைஞர்களின் கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் மையப்படுத்தி ஒரு கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 1990 களில் தென் மாவட்டங்களில் இரண்டு சாதிகளுக்கு இடையிலான மிகப்பெரிய பகை கலவரம் அதனோடு இணைந்த மக்களின் வாழ்வோடு இணைத்து கபடி வீரர் மணத்தி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தித்திக்கும் தீபாவளி!

தீபாவளி.பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்.அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.புத்தாடைகளும், மத்தாப்பும், பட்டாசும், பலகாரமும், என அது தரும் நினைவுகளும் மகிழ்ச்சியும் ஏராளம். குழந்தைப் பருவத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து திகட்டத் திகட்டக் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அதிலும் குறிப்பாக 90 களின் குழந்தைகளுக்கு தீபாவளி என்பது தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத திகட்டாத இன்பத்தை அள்ளித் தந்த பண்டிகை தான். எனது வாழ்விலும் தீபாவளியைப் பற்றிய மகிழ்ச்சிப் பகிரல்கள் ஏராளம் உண்டு..இப்போது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.கறந்துருவீங்களே? இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது. அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, […]

Categories
சினிமா நினைவுகள்

யாருகிட்ட? எங்க கிட்டயேவா?

படித்ததில் பிடித்தது! வடக்கன் Sc@m செய்து கேள்விப்பட்டிருக்கிறோம்….தமிழ்நாட்டின் ஒரு பெரிய மூன்றெழுத்து movie production கம்பெனி வடக்கனையே Sc@m பண்ணி விட்டு இருக்காங்க 🤣🤣🤣.1965 ஆம் வருடம் குழந்தைய மையப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு படம் வந்தது.அது தமிழில் நல்ல ஹிட்… எப்பொழுதுமே தமிழில் ஒரு படம் Hit டானால் அந்த தயாரிப்பு கம்பெனி அதே படத்தை மற்ற மொழிகளிலும் தயாரிப்பார்கள்.அப்படி தயாரிக்கும் பொழுது பெங்களூரில் ஒரு காஸ்ட்லி தியேட்டரில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் […]

Categories
சினிமா

சன் டிவி வராதா?

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியல் தடபுடலாகத் தயாராகி விட்டது.ஒரு புறம் சரத்குமார், மேடையேறி சாகசம் செய்து விளம்பரம் செய்கிறார், மறுபுறம் வளர்ந்து வரும் நடிகர், ஏன் எங்க படமெல்லாம் தீபாவளிக்கு வரக்கூடாதா? நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் எந்த சினிமாவும் மக்களுக்குப் பிடிக்கும் என்று மன உறுதியுடன் பேசியிருக்கிறார். இன்னொரு புறம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள், மீண்டும் தனது பாணியில், தெக்கத்தி கபடி விளையாட்டு வீரர் , அர்ஜூனா விருது பெற்ற வீரரின் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]

Categories
கருத்து குட்டி கதை

நல்லதுக்குக் காலமில்லை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் என்னைத் தனி அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.பக்கத்தில் அமர்ந்திருந்தவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் தயக்கத்தோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னைப் பார்த்து, “சார் எங்க ஸ்டூடன்ட்ஸ் லிட்டரரி காம்பெடிசன்ல சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க . படிக்கிறீங்களா?” என்றார். எனக்கும் பொழுது போக வேண்டுமென்பதால் ” கொடுங்க” என்று சுரத்தில்லாமல் சொன்னேன். அவர் வெளியே போய் நீலநிற ஃபைலை எடுத்து வந்தார். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கனவுகளை சிதைத்த விபத்து!

நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]

Categories
சினிமா

காந்தாரா – திரை விமர்சனம்.

ஒரு படம் பார்க்கும் போது அந்தப்படத்தைப் பற்றிப் புகழ்வதோ அல்லது குறை சொல்வதோ தான் வழக்கம்.. ஆனால் இன்று நான் அந்த வழக்கத்திலிருந்து மாறுபடுகிறேன். ஏனென்றால் நமது மொழியில் இதைவிட சிறப்பான பிரம்மாண்டமான, தரமான திரைக்கதையுடன் உருவான அருமையான படம் ஒன்று நமது மக்களால் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை.ஆனால் இன்று இந்தப்படத்தை ஒவ்வொருவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். இன்றைய படம் காந்தாரா. நாம் கொண்டாடத் தவறிய படம் ஆயிரத்தில் ஒருவன். நான் காந்தாரா படத்தை குறையாகச் சொல்லவில்லை. […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நம் தங்கம், நம் உரிமை!

கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]