பாரத் டாக்ஸி.
ஓலா உபர் ரபிடோ போன்ற தனியார் வாடகை வாகன இணையவழி மற்றும் செயலி வழி தரகு நிறுவனங்களுக்கு மாற்றாக மத்திய அரசின் செயலி.
இந்தச் செயலி இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது.
தனியார் செயலிகள் பரபரப்பான அலுவல் நேரங்களில் தனக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயிப்பதும், ஓட்டுநர்களிடம் அதிகமான தரகு கட்டணம் வசூலிப்பதும் என்ற பிரச்சினைகள் மிக அதிகமாக முன்வைக்கப்படுகிறது.
இனி பாரத் டாக்ஸி என்ற செயலி வந்தபிறகு இந்தத் தரகுக் கட்டணமும் குறைக்கப்படும், மேலும் குறிப்பிட்ட தூரத்திற்கு குறிப்பிட்ட நிர்ணயத் தொகை வசூலிக்கப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அந்தச் செயலி தனியார் செயலிகளைப் போல, முறையாகவும் வேகமாகவும் செயல்பட்டால் பொதுமக்களுக்கும் சரி, ஓட்டுனர்களுக்கும் சரி நல்ல பலன் தான்.
மேலும் இந்தச் செயலியில் நிர்ணயிக்கப்படும் கட்டணம், பொதுமக்களையும் மனதில் கொண்டு , ஓட்டுனர்களின் நியாயமான லாபத்தையும் மனதில் கொண்டு சரியான முறையில் நிர்ணயிக்கப்பட்டால் மகிழ்ச்சி.
ஆனால் ஓட்டுனர்கள் இப்போது நடந்து கொள்வதைப் போல, அமௌண்ட் எவ்ளோ காட்டுது சார்?
அதோட ஒரு ஐம்பது ரூபாய் சேர்த்துக் குடுங்க என்று கேட்காமல் இருந்தால் மிக நல்லது.
அதிலும் குறிப்பாக நாம் அவசரமாக ரயிலோ, பஸ்ஸோ பிடிக்கப் போகும் தருணத்தில் நமது கழுத்தில் கத்தி வைத்தாற்போல, 50 ரூ எக்ஸ்ட்ரா குடுங்க இல்லாட்டி கேன்சல் பண்ணுங்க என்று நம்மை பழிவாங்கக் கூடாது.
பல நல்ல ஓட்டுனர்களுக்கு மத்தியில் இதுமாதிரி ஒரு சில ஓட்டுனர்களால் நமக்கு வெறுப்புணர்வு ஏற்படும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்கிறது.
தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் ஆட்களை கணக்கற்ற அளவில் சேர்த்துக் கொள்வதோடு பெரிதாகக் கண்டிப்பதும் இல்லை.
ஆனால் அரசு செயலியில் இதுமாதிரியான ஓட்டுனர்களைக் கண்டிப்பாக கண்டிக்கவும் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் செய்தால் பொதுமக்களிடையே இன்னும் அதிக வரவேற்பு இருக்கும்.
வரப்போகும் ஒரு செயலியால் மிகப்பெரிய மாற்றம் வருமா என்பது தெரியவில்லை.
ஆனால் மாற்றம் வந்து தானே ஆக வேண்டும்?மாற்றத்தை பிறவற்றில் எதிர்பாராமல் நம்மிலிருந்து துவங்கினால் நல்லது




