Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

திரும்பிப் பார்க்க வைத்த இந்தியப் பெண்கள் அணி!

தலைநிமிரந்து பார்க்கிறது இந்தியா !

திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப்பெண்கள் கிரிக்கெட் அணி.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்றால் தூக்கிப் பிடிக்கவும் தாங்கி நிற்கவுமர் கோடான கோடி ரசிகர்கள் உண்டு.

ஆனால் பெண்கள் கிரிக்கெட் அணி இப்போது தான் ஓரளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்தாலே நாம் இதை விளங்கிக் கொள்ளலாம்
பாத்திர சோப்பிலிருந்து துணி துவைக்கும் பவுடர் வரை அனைத்தையும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தான் விற்று வருகிறார்கள்.

இவ்வளவு பேசுறியே செவ்வாழ நீ மட்டும் ஒழுங்கா என்று கேட்டால் இல்லை என்பது தான் என் பதில்.

நமது ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளின் உலககக்கோப்பைத் தொடரின் போது அரையிறுதி ஆட்டத்திற்காக விடுப்பெல்லாம் எடுத்து ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால. இந்தத் தொடரில் இந்திய அணி அரையிறுதியை வென்றதை செய்தியாகத்தான் பார்த்தேன் என்பது வருத்தம் தான்.

என்னைப்போலவே இன்னும் பல்கோடி ரசிகர்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ரசிகர்களாகப் பழக்கப்படாமல் தான் இருக்கிறார்கள்.

உடனே இது ஆணாதிக்கம் என்றெல்லாம் கம்பு சுத்த வேண்டாம்.நான் குறிப்பிட்ட அந்த ரசிகர்களின் பட்டாளத்தில் பெண்களும் உண்டு.
சொல்லப்போனால் பெண்கள் தான் அதிகம்.

தோனி , கோலி , ரோஹித் ஆகியோருக்கு இங்கிருக்கும் பிரபலத்துவமும், விளம்பரமும் ஸ்மிரிதி மந்தனா, ஹம்ரீத் போன்ற பெண்கள் அணியின் வீராங்கனைகளைக்கு இல்லை.

சொல்லப்போனால் விளம்பரத்தில் நடிக்கும் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹம்ரித் என்ற நாயகிகளைத் தவிர்த்து நமக்கு வேறு யார் பெயர்களும் தெரிவதில்லை.

காரணமில்லாமல் இல்லை.

நாம் சின்ன வயதிலிருந்தே பார்த்துப் பழகி பைத்தியக்காரத்தனமான ரசிகர்களாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு உருவாகியிருக்கிறோம்.

ஆனால் இந்தப் பெண்கள் கிரிக்கெட் அணி இப்போது சிறிது காலத்திற்கு முன்புதான் உருவானது, மேலும் நம்மை ஈர்த்து கவனிக்க வைக்கும் அளவில் இப்போது தான் வளர்ந்து வருகிறது.அதை இந்த மீடியாக்கள் விளம்பரப்படுத்தவும் இல்லை.

எனக்கு விவரம் தெரிந்து இந்த உலகக்கோப்பைத் தொடரில் தான் இந்தியப் பெண்கள் அணியைப் பிரபலபடுத்தி ரசிகர்களிடையே சேர்க்கும் விதமாகப் பல விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால் திறமைக்கு விளம்பரம் எதற்கு என்று அரையிறுதியில் ஆஸ்திரேலியா எனும் ஜாம்பவானை அடித்து துவம்சம் செய்து சாதனை புரிந்திருக்கிறது இந்தியப் பெண்கள் அணி.

இனி இதை இந்தியப் பெண்கள் அணி என்று பிரித்துப் பார்க்காமல் இந்திய அணி என்றே ரசிகர்கள் கொண்டாடத்துவங்கி விடுவார்கள்.

இறுதிப்போட்டியை ஆர்வத்தோடு கோடான கோடி ரசிகர்கள் பார்த்து மகிழ்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் முக்கியமான நான்.

விளையாடுறது கோலியோ ஸ்மிரிதியோ , ஜெயிக்கப்போறது இந்தியா தானே சார்.

வாழ்த்துகள் தோழிகளே!
வெற்றிக்கோப்பை நமதே.!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.