SIR – Special Intensive Revision.
சிறப்பு தீவிர திருத்தம்
இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது?
இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க.
சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு?
போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக் கொள்வது சரிதானா?
காரணம் என்னவென்றால், இப்போதைய காலகட்டம் போல, அன்று கணினிமயமாக்கப்பட்ட, மையப்படுத்தப்பட்ட சான்றுகளைக் கொண்டு வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவில்லை.
உதாரணமாக , ஒருவர் தமிழக தென் மாவட்டங்களில் வசிக்கிறார், அங்கு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். அவர் தொழில் செய்ஙதற்காகவோ, பணி நிமிர்த்தமாகவோ புலம்பெயர்ந்து சென்னைக்கு வருகிறார் எனில் இங்கே அவருக்கு வீட்டு வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, வாயு உருளை அட்டை ஆகியவை இங்குள்ள முகவிரியில் தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்
தேர்தல் சமயத்தில் நிகழும் சிறப்பு வாக்காளர் அட்டை முகாமில் அவர் இந்த ஆவணங்களை சமர்ப்பித்து உங்கள் ஒரு வாக்காளர் அடையாள அட்டையை எளிதாகப் பெற்றுக் கொண்டு இங்கேயே வாக்களிக்கிறார்.
ஆனால. அவர் பூர்வீக ஊரில் இருக்கும் வாக்காளர் அட்டை இன்னும் ரத்து செய்யப்படாமலே தான் இருக்கிறது.
இதைப்போலவே பல ரகங்களிலும் திருட்டுத்தனமாக விநியோகிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு விஷயம் என்னவென்றால், இறந்தவர்களின் பெயர்கள் அந்தப்பட்டியலில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை.
அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் , மக்களாட்சியை விட்டு மறையவில்லை என்ற ரீதியில் சில லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கின்றன.
இப்படி ஒரு ஆளுக்கு இரு தொகுதி வாக்காளர் அடையாள அட்டை, இறந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை ரத்து செய்வதற்காகத்தான் இந்த நடைமுறை.
இந்த முறை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு இனி இது மாதிரி திருத்தங்கள் வராமல் இருக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.
இந்த திருத்தத்தின் போது சில நடைமுறை சிக்கல்களையும் பல சாமானியர்களும் சந்திக்க வேண்டிய சூழல் இருக்கத்தான் செய்கிறது.
தென் தமிழ்நாட்டில் இருந்து என் போன்ற பலரும் குடும்பத்தோடு புலம் பெயர்ந்து பணி நிமிர்த்தமாக சென்னை வந்து விட்டாலும் இன்னமும் எங்களது சில ஆவணங்கள் அங்கிருக்கும் சொந்த வீடுகளின் பெயரிலேயே இருக்கும் காரணத்தால், வாக்காளர் அடையாள அட்டையையும் மாற்றாமல் அந்த பூர்வீக விலாசத்தில் தான் வைத்திருக்கிறோம்.
என்னதான் இங்கு வந்து பத்து பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் கூட, இன்னமும் தேர்தல் என்றால் அது நம்ம பூர்வீக ஊர் தொகுதியை நோக்கிய சிந்தனையில் தான் ஆழ்த்துகிறது.
அப்படி பல லட்சம் பேர் பணிநிமிர்த்தமாக வெளியூர் வந்த காரணத்தால், அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் வரும்போது அந்தப் படிவத்தை பெற்றோரோ, இணையரோ வாங்கி நிரப்பித் தரலாம் என்று ஒரு வாய்ப்பு கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறி.
உறவினர்கள் யாராவது சொல்லி அந்தப் படிவங்களை வாங்கி வைக்க இயலுமா?
நேரில் இதற்காக ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வருமா என்பது விளங்கவில்லை.
அப்படியொரு சூழல் வந்தாலும் தேர்தலுக்கு ஊருக்குப் போவதாக நினைத்துக் கொண்டு போய் வருவதைத் தவிர வேறு வழியில்லை.
இதில் இன்னொரு பெரிய சிக்கல் உள்ளது.
வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் , அதாவது எம்மைப்போன்று பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தவர்கள், தங்களது பூர்வீகமான அந்த மாநிலத்திலேயே தங்களது வாக்காளர் அடையாள அட்டையைப் புதுப்பிக்க வழிமுறைகள் செய்தால் நல்லது.
அங்கு செல்ல தயக்கம் காட்டி தற்போது இங்கிருக்கும் விலாசத்தை வைத்து அடையாள அட்டையைப் புதுப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இந்தப் பகுதிக்கு மாறவிடும்.
அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் உள்ள தொகுதிக்கு வழங்கப்பட்டு விடும்.
இது ஒரு குளறுபடிக்கு வழிவகுக்கும்.
அங்கிருந்து இங்கு சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு இந்த மாநிலக் கட்சிகள் தான் தெரியுமா? அல்லது பூர்வீகம் தான் தெரியுமா?
இது தேசிய கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த வழிவகுக்கும்.
இதனால் தான் திமுக, மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகள் இதை எதிர்க்கின்றன.
எது எப்படியோ, இந்தத் திருத்தம் நல்லபடியாக குளறுபடி இல்லாமல், எம் போன்ற சராசரி குடிமகன்களின் வாக்குரிமையைப் பறித்து விடாமல் இருந்தால் சரிதான்
எதுவும் ஆரம்பிக்கும் முன்பே தெரியாது.
ஒருவேளை இந்தத் திருத்தப்பணிகளால் பெரிய அவதி ஏதாவது நேர்ந்தால், இந்தக்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்காடி, அதை சரிசெய்யத் தயாராக இருக்க வேண்டும்.
நமது உரிமை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்



