Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையின் விபரீதம்.

ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும்.

எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது.

அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.
இதில் அந்த தம்பதியினர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தக் கொடுமை நிகழக் காரணம் மூடநம்பிக்கை.

அந்த கிராமத்தில் பல குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

இதற்கு அந்த தம்பதி தான் காரணம்.
அவர்கள் சூனியக்காரர்கள் , அவர்கள் செய்யும் சூனியம் தான் இந்த ஊரில் உள்ள அனைவரையும் இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று கிளம்பிய வதந்தி, ஊர்முழுக்கப் பரவி, அனைவராலும் நம்பப் பட்டு இத்தகைய கொடூரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

மங்கள்யான் விண்கலத்தை நினைத்துப் பெருமிதம் கொள்ளும் இதே நாட்டில் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது அவலம்.

இந்த விதமான சூனியம் என்ற எதிர்மனநிலை கொண்ட மூட நம்பிக்கையின் அடிப்படை கடவுள் நம்பிக்கை என்ற நேர்மறையின் எதிர்விளைவு தான்.
அதாவது கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை.
ஆனால் கடவுளின் பெயரால் இருக்கும் மூடநம்பிக்கைகளையும், வியாபாரத்தையும் புரிந்து கொள்ளாத மக்கள் தான் இந்த விதமான மூடநம்பிக்கைகளுக்கும் வதந்திகளுக்கும் ஊக்கம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.