ஓராண்டைக் கடந்துவிட்டோம்.
டிசம்பர் 31 மாலை முதலே பல நாடுகள் புதிய ஆண்டை வரவேற்ற செய்தியை நாம் பார்க்க முடியும்.
இப்போதும் கூட சென்ற ஆண்டு புத்தாண்டு இரவில் குதூகலித்த நினைவுகள் நீங்கா நினைவுகளாகவே உள்ளது.
இந்த ஆண்டு பலருக்கும் பலவிதமான புதுப்புது அனுபவங்களைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
எல்லோரையும் போல மற்ற எல்லா ஆண்டுகளையும் போல, எனக்கும் இந்த ஆண்டு அமைந்ததா என்றால், இல்லை என்பதே என் பதில்.
எல்லாருக்கும் இது நல்ல ஆண்டாகவோ, அல்லது மறக்க முடியாத காயங்களைத் தந்த ஆண்டாகவோ அமைந்திருக்காது.
சிலருக்குக் கொண்டாடும் விதமாகவும், சிலருக்கு நினைத்துப் பார்க்கவே முடியாத அளவு துயரையும் தந்த ஆண்டாகக் கூட அமைந்திருக்கலாம்.
அனுபவங்கள் எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானவை.
ஆனால் ஒவ்வொரு ஆண்டையும் நாம் எதிர்கொள்ளும் போது அந்தந்த ஆண்டுகள் நல்லாண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடனேயே எதிர்கொள்கிறோம்.
வரும் 2026 ஆம் ஆண்டும் நமக்கெல்லாம் வசந்தம் தரும் நல்லாண்டாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலை நம் எல்லோரின் சார்பிலும் வைத்துக்கொள்கிறோம்.
ஒன்னும் மாறல, காலண்டர் தான் மாறுது என்ற சொல்லாடல்கள் ஒருபுறம் இருந்தாலும், பிறப்பது புதிய ஆண்டு.
புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், இன்பத்தையும் நமக்குத் தரும் என்ற நம்பிக்கை நம் அனைவரின் மனதிலும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
நள்ளிரவில் விழித்திருந்து புத்தாண்டு வரவேற்றுக் கொண்டாடியதோடல்லாமல், கடவுள்களையும் இரவு புத்தாண்டுக்கு விழிப்பித்து பூஜைகள் செய்வது நமக்கு வழக்கமாகி விட்டது.
ஆண்டுதோறும் செய்யும் வழக்கமான செயல்கள் தான்.
இதுவும் வழக்கமான வாழ்த்து தான்.
இந்த ஆண்டு எல்லோருக்கும் இனிய பொன்னாண்டாக அமைய அன்பான வாழ்த்துகள்.
என்னவோ தெரியவில்லை, சென்னையில் மழை பெய்து இந்த ஆண்டை வாழ்த்தித் துவக்கியிருக்கிறது.
நம்பிக்கை கொள்வோம்.
வரவிருக்கும் ஆண்டு நல்லாண்டு என்று.

