குடிமைப் பொறுப்புகளை சரியாகச் செய்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
குடிமைப் பொறுப்புகள் என்பது என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சமூகத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்காகவும் தாமாக முன்வந்து செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். சட்டம் மற்றும் விதிகளை மதித்தல், வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவை இதில் முக்கியமானவை
இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பது நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் பெருமையை நிலைநாட்டுகிறது.
இதை இன்னும் ஆழமாக உற்றுநோக்கினால், பொதுப் பாதுகாப்பு , அதாவது பொது சொத்துகளைப் பாதுகாப்பது , அவற்றிற்கு சேதாரம் வராத வண்ணம் நடத்தை என்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
இந்த விஷயத்தில் நாம் ஜப்பானைப் பற்றி எப்போதும் பெருமையாகப் பேசுவது வழக்கம்.
அப்படியிருக்க, இந்திய அளவில் நாம் இதில் முன்னோடிகளாக இருப்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
இனி இந்தியாவின் மற்ற மாநில மக்கள் நமது மக்களை முன்னுதாரணமாகப் பேசப் போகிறார்கள்.
பாலின அணுகுமுறையில் நமது மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதாவது, மாற்று பாலினத்தவரின் மீதான அணுகுமுறை , சமூகத்தில் பாலின சமத்துவம், தனிப்பட்ட பங்களிப்பு , ஆண் , பெண் பேதமின்றி சமுதாயத்தில் சமமான நடைமுறை என்பவற்றில் நமது மாநிலம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்த முக்கியமான ஒன்று பிரிவினை மற்றும் பாகுபாடு.
மக்களுக்கிடையிலான சாதி மற்றும் மத ரீதியான பிரிவினை மற்றும் பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக வாழ்வதில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதில் கேரளாவைப் பொறுத்தமட்டில் இன்றளவிலும் நாயர், நம்பூர்தி , மேனன் என்று சுயசாதிப் பெயர்களை தனது பெயர்களோடு சுமந்து கொண்டு சாதி ரீதியிலான உயர்வு , தாழ்வு என்பதை வெளிப்படையாகப் பரைசாற்றாமல், சொல்லாமல் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அந்தளவில் கூட பிரிவினை என்பது இல்லை.
ஆங்காங்கே ஒரு சில மக்கள் மற்றும் ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து சாதி ரீதியான பிரிவினை, மத ரீதியான பாகுபாடு என்பது இங்கு இல்லை.
இப்படி பாதுகாப்பான வாழத் தகுந்த மாநிலம் என்பதையும் தாண்டி, பண்பிலும், கலாச்சாரத்திலும், குடியுரிமைக் கடமைகளிலும் நம் மாநிலம் முதன்மையாக இருப்பது பெருமை.
நமது பெருமை நிலைக்க நாம் தொடர்ந்து முயற்சிப்போம்.

