நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது.
கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.
ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை.
லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான போட்டியில் சற்று கதி கலங்கியே திரும்ப வெற்றிப் பாதையை அடைந்தது. அதேபோல, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் மிகப்பெரிய வெற்றி எல்லாம் இல்லை.
ஏதோ பாகிஸ்தான் அணியுடனான ஆட்டம் மட்டுமே ஒரு பக்கமாக முடிந்தது.
இப்போது சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணியின் உண்மையான பலம் என்ன என்பது தெரிந்து விட்டது.
எல்லோரும் மோசம் என்று சொல்லவிட இயலாது. இந்த நாள் சாதகமாக அமையாமலும் சிலர் சோடை போயிருக்கலாம்.
ஆனால் ஜாம்பவான் என்று பெருமை பீத்தியதெல்லாம் எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பதை உணர்த்திய ஆட்டம் இது.
சமூகவலைதளங்களில் பெரிதாக கிரிக்கெட் தெரியாத அரைக் கோளாறுகள் புகழ்ந்து தள்ளுவது சரி.
ஆனால் கிரிக்கெட் முன்னோர் என்று தங்களை சொல்லிக் கொண்டு வர்ணனையாளர்களாக அமர்ந்திருக்கும் சிலரும் கூட இதே மாதிரி பெருமை பீத்தியது மன்னிக்க இயலாத ஒன்று.
சிரிக்க சிரிக்க வர்ணனை செய்து பிரபலமடைந்த கிரிக்கெட் பின்புலமில்லாத ஆர்ஜே பாலாஜியை மெதுவாக காணாமல் செய்து விட்டு. கிரிக்கெட் பற்றி சிறப்பாகப் பேசுவோம் என்று சூழ்ச்சி செய்த இப்போதைய வர்ணனையாளர்கள், டிங்டிங் பால்..பொட்டலம், மூக்கு மேல ராஜா, பச்ச புல் பத்திக்கிச்சு , கண்ல ஒத்திக்கலாம் என்று மங்குனித்தனமாக கடுப்பேற்றும் விதமாக காமெடி செய்வது சகிக்க இயலவில்லை என்றாலும் பொறுத்துக்கொள்ளலாம்.
ஆனால் இவர்கள் சாதியப் பின்புலம் அல்லது ஏதோ ஒன்றைக் காரணமாக வைத்துக்கொண்டு நமது ஆட்டக்காரர்களை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு.
நேற்றைய ஆட்டத்தில் சோடை போன திலக் வர்மாவை அவனெல்லாம் ஏன் ஆட வாரான் என்ற ரீதியில் பேசினார்கள்.
ஆனால் தொடர்ந்து டக் அவுட்டாகி நேற்றும் பெரிய பங்களிப்பு தராமல் சீக்கிரமாக வெளியேறினார்.
அவரைப் பல் படாமல் கடிக்கிறார்கள் இந்த வர்ணனை கும்பல்..இதற்கு என்ன காரணமோ?
இது வர்ணனை கும்பலா அல்லது வர்ண கும்பலா?
திலக் வர்மா இத்தனை ஆட்டங்களிலும் நிதானமாக நல்ல ஆட்டக்காரராக இருந்துள்ளார். ஏன் பல ஆட்டங்களில் வெற்றிக்கான காரணகர்த்தாவாக்
க் கூட இருந்தார்.
அப்படி இருந்தவரை போகற போக்கில் ஒரு ஆட்டத்தை வைத்து எடைபோட்டு அணியை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசிவதெல்லாம், வர்ணனையாளருக்கு அழகா?
கிரிக்கெட் அணியும் சரி வர்ணனை அணியும் சரி நெறிப்பட வேண்டும்.




