ஜூலை 15, கல்வி நாள்.
நமது அருமை மாநிலத்திற்குக் கல்விக் கண் திறந்த கர்ம வீரர், கல்வித் தந்தை, படிக்காத மாமேதை ஐயா திரு.காமராஜரின் அவர்கள் பிறந்தநாள்.
பொற்கால ஆட்சி என்று இன்றுவரை போற்றப்படும் நல்லாட்சியைத் தந்த உத்தமர்.
கிங் மேக்கர் என்று இன்றளவும் அழைக்கப்படக்காரணம், நேரு அவர்கள் நோயுற்ற தருணத்தில் இருந்த போது இந்தியாவில் ஜனநாயகம் அவ்வளவு தான் என்று வெளிநாட்டினர் நினைத்த போது, காங்கிரஸ் கட்சியை சீராக வழிநடத்தி சாஸ்திரி, இந்திரா காந்தி என அடுத்தடுத்த பிரதமர்களை உருவாக்கி இந்தியாவின் ஜனநாயக இறையாண்மையைப் பாதுகாத்தவர் இவர்.
ஆனால் இவர் இன்று ஒரு மாநிலத் தலைவராக மட்டுமே அறியப்படுவது வேதனை அளிக்கிறது என்று வல்லுநர்கள் பதிவிட்டுள்ளதாகத் தகவல்கள் உண்டு.
நாம் அறிந்தது போல, கரை படியாத கைகள்
தன் தாயானாலும், தன்னால் வசதி செய்து தரப்படும் வரை, பொதுக்குழாயில் சென்று தண்ணீர் எடுத்தால் போதும் என்று பரிந்துரைத்தவர்.
சாகும் போது 4 சட்டையும் வேஷ்டியும், பையிலும் வங்கியிலுமாக 225 ரூ பணமும், இப்படியும் ஒரு அரசியல்வாதியை இந்த நாடு இந்த நூற்றாண்டில் கண்டிட இயலுமா?
அணை கட்டிப் பராமரித்த பெருமை, கரிகாற் சோழனுக்குப் பிறகு, காமராஜருக்குத் தான்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெருமை கொண்ட பெருந்தலைவர் ஐயா காமராஜர். இவர் புகழ் பாட ஒரு நாள் போதாது.
கல்வித்தந்தை காமராஜர் கண்ட கனவு நினைவாகட்டும். நல்லதொரு நாடு மலரட்டும்.
கல்வி பரவி அறியாமை ஒழியட்டும்.


