நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம்.
நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது.
தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன்.
தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது.
சமூக விழிப்புணர்வு பற்றிய தகவல்களைப் பற்றி எழுதும் போது இது
மாதிரி ஏதாவது நிகழலாம் என்பது எதிர்பார்த்ததே!
ஆயிரமாயிரம் போலிக் கணக்குகள் உலாவும் இதே வலைத்தளத்தில் கள்ளம் கபடமில்லாமல் என்னுடைய சுய வாழ்க்கை உட்பட,நமது நினைவுகள் பக்கத்தின் அத்தனை பதிவுகளையும் அன்றாடம் அதில் பதிவேற்றி வந்திருக்கிறேன்.
அந்த நேர்மைக்கு நல்ல பரிசி கிடைத்துள்ளதாக மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
நாங்கள் கல்லூரி பயிலும் போது , ஆர்குட் என்ற ஒரு வலைத்தளம் உண்டு.
அது மிகப்பிரபலமாகாத காரணத்தால் சில நண்பர்களின் அறிமுகம் காரணமாக இந்த முகநூல் வலைத்தளத்தை உபயோகிக்கத் துவங்கினேன்.
நடிகர் அஜித்குமார் புராணம் துவங்கி, எனது அப்பா புராணம், நண்பர்ளுடனான பயணம் பற்றிய புகைப்படங்கள், எனது திருமணப் புகைப்படங்கள், வாழ்த்துகள், கேலி எனப் பல பதிவுகளை செய்திருந்தேன்.
எனக்கு என் வாழ்வைப் பற்றிய நூலகமாகப் பல நேரங்களில் அந்தப் பக்கம் செயல்பட்டிருக்கிறது.
இன்று அது இல்லை என்பது வருத்தம்.
சிறிது சிறிதாக ஒட்டுமொத்த நண்பர்களையும் மீண்டும் இதில் இணைத்து விடுவேன் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது.
தொடர்ந்து பயணிக்கலாம்.
வரும் காலத்தில் நீங்கள் தரப்போகும் ஆதரவுக்கு நன்றி!