சமீபத்தில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் என்றால் இரண்டு மாவட்டங்கள் முழுமையாகக் காணாமல் போன கதைதான்.
சரி அப்படியிருக்க அந்த 65 லட்சம் பேரும் இத்தனை நாளாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தார்கள்? என்ன அடிப்படையில் அது வழங்கப்பட்டது.
இதுதான் சரி என்றால், இவ்வளவு பெரிய தவறு இத்தனை ஆண்டு காலமாக இருந்திருக்கிறதா?
65 லட்சம் என்பது சாதாரண விஷயமா?
தொகுதிக்கு 50000 வாக்கு வித்தியாசம் என்றால் கூட, 65 லட்சம் என்பது 130 தொகுதிகளின் வாக்கு விகிதத்தை, தேர்தல் முடிவை மாற்றக் கூடியது அல்லவா?
அப்படியென்றால் இத்தனை ஆண்டு காலம் இந்த 65 லட்சம் பேர் என்ற எண்ணிக்கை எத்தனை தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்திருந்திருக்கிறது?
இந்த அதிர்ச்சி போதாது என்று இது சம்பந்தமாக மேலும் பல அதிர்ச்சி செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த மாநில முதல்வர், நான் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
அவர்கள் கொடுத்தார்கள் நான் வைத்திருக்கிறேன் என்று எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகச் சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.
இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது இன்னும் கொடுமை.
தேர்தல் ஆணையம்,ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் ஆகியவற்றை குடியுரிமைச் சான்றுகளாகக் கருத முடியாது என்று வாதாட நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
காரணம் ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளில் போலிகள் அதிகம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆதார் என்பது குடிமகனின் அடையாளம் என்று மார்தட்டிக் கொள்கிறோம், வாக்காளர் அடையாள அட்டை என்பது நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி, ரேஷன் என்பது குடிமகனின் உரிமை.
இந்த மூன்றிலும் போலிகள் அதிகம் உள்ளது என்று ஒரு நாட்டின் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் உரக்கக்கூறுவது சர்வதேச நாடுகளின் முன்பு நாம் தலைகுணிந்து வெட்கப்பட்டு நிற்கச் செய்யும் விஷயமல்லவா?
ஆதார் என்பது குடிமகனின் அடையாளம் என்று மார்தட்டிக் கொள்கிறோம், வாக்காளர் அடையாள அட்டை என்பது நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி, ரேஷன் என்பது குடிமகனின் உரிமை.
இந்த மூன்றிலும் போலிகள் அதிகம் உள்ளது என்று ஒரு நாட்டின் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் உரக்கக்கூறுவது சர்வதேச நாடுகளின் முன்பு நாம் தலைகுணிந்து வெட்கப்பட்டு நிற்கச் செய்யும் விஷயமல்லவா?
போலிகள் உள்ளன என்ற வார்த்தை எவ்வளவு அபத்தமானது?
எத்தனை பரிசீலனை, எத்தனை எத்தனை சரிபார்ப்புகளுக்குப் பிறகு தரப்படும் இந்த அட்டைகளில் இப்படி போலிகள் இருக்கிறது என்பதை நீதிமன்றமே சொல்லும்பட்சத்தில் அரசு இயந்திரம் என்ன லட்சணத்தில் உள்ளது ?
நாம் இன்னும் ஒரு நாளில் சுதந்திர தினத்தை வேறு கொண்டாடப் போகிறோம்.
எப்போது ஓயுமோ இந்த ஊழலும், போலியும் லஞ்சமும் , கையூட்டும்..
எப்போது தலைதூக்குமோ என் நாடு?
எப்போது வல்லரசு ஆகுமோ என் தேசம்?
உண்மையான தேச சுதந்திரம் இன்னும் எட்டப்படவில்லை.
அது வெள்ளையர்களை விரட்டியதால் மட்டும் கிடைத்தது அல்ல…இது மாதிரியான போலிகளையும், கொள்ளையர்களையும் விரட்டிய பிறகே கிடைக்கும்!
உண்மையான சுதந்திரத்தை எதிர்நோக்கி!