2026 தேர்தலுக்காக எதிர்கட்சிகளும், புதிதாக முளைத்த கட்சிகளும் பல வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், தற்போது ஆளும் கட்சியின் தேவை என்பது, ஆட்சியை முறையாக, நல்ல பல திட்டங்களோடு மக்களின் மனதைக் கவரும் படியாக நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
எந்த வித அவப்பெயரும் ஏற்பட்டு விடக கூடாது.
செயல்படுத்தும் திட்டங்களில் பாரபட்சமின்றி தொய்வின்றி மக்களின் பாராட்டுகளைப் பெறும் விதமாக திட்டம் நிகழ வேண்டும். அதை மனதில் கொண்டு, திமுகவும் கன கச்சிதமாக இந்த விஷயத்தை செய்து வருகிறது.
ஏற்கனவே திமுக வின் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, மகளிருக்கான திட்டங்கள் மன்னரின் மணிமுடியில் மேலும் முத்துக்களைப் பதித்தது போல மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றிருக்கிறது.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணமும், சரி, மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையும் சரி பெண்களின் பேராதரவை திமுக பக்கம் இழுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அது மட்டுமல்லாமல், எதிர்கட்சிகளின் பலமான ஆயுதமான மதரீதியான கவர்ச்சியையும் பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம், சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள், ஆடிமாத அம்மன் கோவில் இலவசப் பயணம், நவக்கிகரக கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்து சார்பாகப் பயணம் என பல திட்டங்களைக் கொண்டு அந்த பந்திலும் ஆறு ஓட்டங்களை அடித்து விட்டது திமுக.
மேலும் பள்ளிக்கல்விக் கொள்கையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாது என்று சொல்லிக்கொண்டே, எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டார்.
ஆனால் சமீபத்தில் திமுக அரசு 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு ரத்து, இருமொழிக்கொள்கை தொடரும் என்று அதிரடியாக அறிவித்து மாணவர்களிடயே மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் உங்ளுடன் நான் என்ற பெயரில் இலவசமாக உடல் பரிசோதனைகளைச் செய்யும் நலத்திட்ட உதவி வெகுவான மக்களைக் கவர்ந்துள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மலைப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற திட்டம் ஒரு நல்ல நகர்வு.
இதற்கெல்லாம் கிரீடமாக தாயுமானவர் திட்டம் என்ற பெயரில், முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் திட்டம் என்பது இந்த ஆட்சியில் திமுக செய்யவிருக்கும் மிகப்பெரிய சாதனை தான்.
காலை உணவுத் திட்டம் என்று பள்ளிக் குழந்தைகளில் துவங்கி தாயுமானவர் திட்டம் என்று முதியோர் வரை சகல விதமான மக்களையும் கவரும் விதமான நல்லாட்சியைத் தந்து வெற்றி நடைபோடுகிறது திமுக.
சின்ன சின்ன சலசலப்புகளைத் தாண்டி ஒட்டுமொத்த சூழ்நிலைகளும் திமுகவிற்கு சாதகமானதாகத் தான் உள்ளது.
மேலும் தாயுமானவர் திட்டத்தின் மூலமாக மறைந்த கேப்டன் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்திற்கான முதல் அடியைத் திமுக எடுத்து வைத்ததற்காக பிரேமலதா அவர்கள் பாராட்டியிருப்பது தேமுதிக திமுக கூட்டணிக்கு வழிவகுக்குமோ என்று கூட சிந்திக்க வைக்கிறது.
அதேபோல, பன்னீர் செல்வம் அவர்களின் சந்திப்பும் அவரது திமுக கூட்டணிக்கான எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்த கூட்டணிகள் அமைந்தால் திமுக விற்கு மேலும் மேலும் பலம் சேர்ந்துவிட்டது போலத்தான்.
பார்க்கலாம், 2026 ல் திமுக தக்கவைக்கிறதா என்று!