Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

வேகமாய்ப் பரவும் போலிச் செய்திகள்!

இணையதளத்தில் செய்திகள் எவ்வளவு வேகமாக நம்மை வந்தடைகிறதோ அதேபோல போலிச் செய்திகள் சிலவும் நம்மை எளிதாக வந்தடைவதோடு இல்லாமல் நம்பும் படியாகவும் அமைந்து விடுகின்றன.

அதில் நன்மை, உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கம் என்று துவங்கி, மத வழிபாடு வரை, போலி வதந்தி ஆகியவை பரப்பப்படுகின்றன. இதன் ஆரம்பப் புள்ளி
என்ன? எதற்காக இது நிகழ்கிறது என்பது தான் விளங்குவதில்லை.

அந்தக்காலங்களிலாவது ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் 10 பைசா முதல் 1 ரூ வரை கட்டணம் இருந்தது. அப்படியிருக்க அந்தக் குறுஞ்செய்தி பரவும் விகிதத்திற்கு ஏற்ப அந்த அலைபேசி சேவை நிறுவனங்கள் சம்பாதித்தன என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது புலனம் அதாவது வாட்ஸ் அப்பிலும் இது தொடர்வது புதிர் தான்.

இதன் ஆரம்பப் புள்ளி ஒன்று உண்டு.
துண்டு பிரசுரங்கள்.

முன்பெல்லாம், பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் போது விதவிதமான ஏமாற்றுக் காரர்களைப் பார்க்கலாம். அதில் ஒன்று, துண்டுப் பிரசுரம் அச்சடிக்கும் ஏமாற்று வேலை.

அதாவது அந்த ஊருக்கு அருகில் ஒரு புற்றுக் கோவில் இருப்பதாகவும், அது சக்தி வாய்ந்த்து என்றும், அந்தக் கோவிலைப் பற்றி பல பேருக்குத் தெரிவிக்கவே இந்த்த துண்டுப் பிரசுரம் அச்சடிக்கப்பட்டதாகவும் எழுதியிருக்கும். மேலும் இதே போல, 100 பிரசுரங்களை அச்சடித்து 100 பேரிடம் கொடுத்தால் நினைத்தது நிறைவேறும் என்றும், இதை உதாசீனம் செய்த ஒருவர் ரத்தங்கக்கி இறந்து விட்டார் என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

பயந்தவர்கள், 100 துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டால் யாருக்கு லாபம்?

இது ஒரு ஏமாற்று வேலை.

ஆனால் இதெல்லாம் பணத்துக்காக நிகழ்ந்தது.

இப்போது நிகழ்பவை தான் நேரடியாக விளங்குவதாக இல்லை.

இன்று வாட்ஸ் அப் குழுமத்தில் ஒரு செய்தி.

Alohelion phenomenon என்பது பற்றி.
அதாவது பூமி சூரியனை வட்டமாகச் சுற்றிவரவில்லை.

நீள்வட்டமாக சுற்றி வருகிறது. அப்படி நீள் வட்டமாக சுற்றும் போது ஒரு நாளில் சூரியனுக்கு அருகிலும், ஒரு நாளில் சூரியனிலிருந்து தொலைவிலும் இருக்கும்.

இதனால் மிகப்பெரிய மாற்றம் ஒன்றும் நிகழாது.

இந்த alphelion phenmenon என்பது பூமி சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் நாள்.
அந்த நாளானது இந்த வருடம் ஜூலை 3 ஆம் தேதி நிகழ்ந்தது.

ஆண்டுதோறும் இது ஜூலையில் தான் நிகழும்.

ஆனால் இன்று வந்த செய்தியில் இந்த நிகழ்வு நாளை துவங்க இருப்பதாகவும், இதனால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கடுமையான குளிர், உடல் வலி ஏற்படும் என்றும் பீதி கிளம்பும் விதமாக அந்தச் செய்தி இருந்தது.

இது பீதி கிளப்புவதைத் தவிர வேறு எதற்காக?

இது உண்மையா பொய்யா என்று தெரியாமல் நம்மாட்களும் உடனே நம் சொந்தங்களின் மீது அக்கறை உள்ளவர்களாய் உடனடியாக இதை அனுப்பி விடுகிறார்கள்.

நேரமும் விரயம், தேவையில்லாத பீதியும்கூட.

ஆக இனி ஒவ்வொன்றையும் தீர ஆராயாமல் முடிவு செய்ய வேண்டாமே?

அது என்ன விளைவுக்காக துவங்கப்பட்டது என்பது தெரியாமல் நாமும் விளக்கில் விழும் பூச்சி போல அதில் விழ வேண்டாமே?
உஷாரய்யா உஷாரு.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.