சமீபத்தில் மிக அதிக அளவில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் தெரு நாய்கள் பற்றியது தான்.
🐶 நாய் என்றால் பிடிக்காத மனிதர்கள் ஒரு சிலரே உண்டு. அந்த ஒரு சிலரைத் தவிர்த்து மீதி மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நாய் என்பது செல்லப் பிராணி தான்.
செல்லப்பிராணி தானே ஒழிய வீட்டிற்கு வீடு நாய் வளர்க்கிறார்களா என்றால் அது கிடையாது.
குறிப்பிட்ட ஆட்கள் அதிலும் குறிப்பாக செல்வந்தர்களே பெரும்பாலும் நாய்களை வளர்க்கிறார்கள். சிலர் கௌரவத்திற்காகவும், பலர் பாசத்திற்காகவும்.
அதைத்தாண்டிய அனைவரும், அதாவது 🐶 நாய்களின் மீது அன்பு கொண்டவர்கள், தெருவில் சுற்றித் திரியும் ஒரு சில நாய்களிடமே அந்த அன்பைப் பரிமாறுகின்றனர்.
எனக்கும் கூட அது மாதிரியான பல அனுபவங்கள் உண்டு, அதை இங்கே பகிர்ந்திடவும் செய்திருக்கிறேன்.
தெரு நாய்கள் பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல என்றாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதைப் போல, சமீப காலங்களில் கட்டுக்கடங்காமல் வளர்ச்சி பெற்ற தெரு நாய்களின் எண்ணிக்கை சற்று அச்சுறுத்தலாகத்தான் மாறி விட்டது.
நேரடி தாக்குதல் என்ற ரீதியில் இந்த அச்சுறுத்தல் குறைவு என்றாலும், ரேபிஸ் வைரஸ் பரப்புவதில் இந்தத் தெரு நாய்கள் முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றன.
அதன் காரணமாக பல உயிரிழப்புகளும் நிகழ்ந்த பிறகும், அரசாங்கமும், நீதிமன்றமும், நாய்களின் மீது கரிசனம் காட்ட ஏது வழி?
மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்கும் இந்த உலகத்தில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் காப்பகங்களில் அடைத்துப் பராமரியுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு அவ்வளவு கொடூரமானதா?
அதை எதிர்த்து விலங்கு ஆர்வலர்கள் போராடுவது கேலிக்குரியது. அவர்களைப் பார்த்து ராம் கோபால் வர்மா கேட்டது சரிதான்.
“நாய் மட்டும்தான் உயிரா?”
உங்கள் வீட்டிற்குள் நுழைந்து எலிகளையும், கரப்பான் பூச்சிகளையும், மருந்து வைத்துக் கொன்று விட்டு இங்கே விலங்குகளின் உயிர் என்று போராட்டம் செய்வது சரிதானா?
நாய்களுக்கு சுதந்திரமாக சுற்றித் திரிய உரிமை உண்டு என்றால் எலிகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும் மட்டும் ஏன் அது இல்லை?
சரி இவர்கள் இறங்கிப் போராடுகிறார்களே? இவர்களில் எத்தனை பேர். தன்னைப் பெற்ற அம்மா அப்பாக்களைக் காப்பகங்களில் விட்டு வந்திருக்கிறார்களோ கணக்கெடுத்தால் தான் புரியும்.
சரி இப்படி அக்கறை கொண்டு போராடுகிறார்களே, அவர்களிடம் தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கணக்கெடுத்து ஆளுக்கு 5 என்று பிரித்துக் கொடுத்தால் வீட்டில் வைத்து வளர்ப்பார்களா என்ன?
துண்டையும், துணியையும் காணோமென்று ஓடி விடுவார்கள்.
இதெல்லாம் சும்மா ஒரு விளம்பர செய்கை.
இன்றும் கூட காஸாவில் பொதுமக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைத்தடுக்க யாருக்கும் வழியில்லை.
நாய்களைக் காப்பகத்தில் அடைக்கக்கூடாது என்று ஒரு போராட்டம்.
கண்டிப்பாக இவர்களிடம் தலைக்கு இத்தனை நாய் எனப்பிரித்துக் கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டும். முடியாதென்பவர்களை சிறையில் தள்ள வேண்டும்.
அப்படி சிறை செல்ல விரும்பாதவர்களை நாய் காப்பகத்திலேயே பணியமர்த்தி தங்கள் பாசத்தைக் காட்டி வளர்க்கச் செய்ய வேண்டும்.
அப்படி சிறை செல்ல விரும்பாதவர்களை நாய் காப்பகத்திலேயே பணியமர்த்தி தங்கள் பாசத்தைக் காட்டி வளர்க்கச் செய்ய வேண்டும்.