மோசடி.
மனிதனின் தேவை அளவோடு இருந்த போது மோசடி என்பது குறைவாகவே இருந்தது.
உணவு, உடை, இருப்பிடம் மட்டும் போதும் என்று வாழ்ந்த காலத்திலும், ஏன் நாகரீகம் என்ற ஒன்று இல்லாத காலத்திலும் மோசடி என்பது மிகக் குறைவாகவே இருந்தது.
பணமும், பகட்டும் நவநாகரீக வாழ்வும் வளர வளர, மனிதனின் ஆசையும் வளர, மோசடி என்பது வளர்ந்து கொண்டே வருகிறது.
பிச்சைக்காரன் முதல் தங்கத்தட்டில் உணவருந்தும் பணக்காரன் வரை ஒரே பூமியில் தானே வாழ்கிறான்.
ஆக ஒருவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இன்னொருவன் அறிந்திடாமல் இல்லை.
அதோடு நில்லாமல், தானும் அவனைப் போல சொகுசாக வாழ வேண்டும், கார், பங்களா என்ற ஆடம்பரங்களை அனுபவிக்க வேண்டும் என்று என்று பெயர் ஒரு சில சமயம் பற்றி ஒரு சில சமயம் சமயம் சமயம் மற்றும் 11 ஆசை துளிர்விடத்துவங்கும் போது உழைப்பு மட்டும் போதாது, வேறேதாவது செய்தால் தான் நாம் முன்னேறலாம் என்ற தவறான நினைப்பில் மோசடி என்ற வழியைத் தேர்வு செய்கிறான்.
இன்னொருவனை ஏமாற்றி அதில் தான் இன்பம் கண்டாலும் தவறில்லை.
இறந்த பின் நரகம் என்ற கதையெல்லாம் எனக்கில்லை; வாழும்போது சொர்க்கத்தை அனுபவித்து விட வேண்டும் என்ற தீராத மோகத்தில் துணிந்து மோசடிகளைச் செய்கிறான்.
சமீபத்தில் ஒரு செய்தி.
சுகாதாரத்துறை அதிகாரி போல நடித்து, தேனாம்பேட்டை டி எம் எஸ் அலுவலகத்திற்கு வரவழைத்து, மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 60 லட்சம் ஒரு பெண்ணிடம் மோசடி.
இதைச் செய்ததும் இன்னொரு பெண்.
ஆக இங்கே பாகுபாடுகள் இல்லை.
ஆண், பெண் என வர்க்க பேதமில்லாமல் மோசடிப் பேர்வழிகள் உள்ளார்கள்.
இதில் மருத்துவக் கல்லூரியில் பணம் கொடுத்து இடம் வாங்க நினைத்த அந்தப்பெண்ணும் மோசடிக்காரி தான், இடம் வாங்கித் தருவதாகச் சொல்லி இந்தப் பெண் இல்லாமல் இன்னும் பலரிடம் சில கோடிகளை ஏமாற்றிய அந்தப் பெண்ணும் பலே மோசடிக்காரி தான்.
ஆனால் வழக்கு என்று வரும்போது பணம் இழந்தவர்களை அப்பாவிகளாக, பாதிக்கப்ட்டவர்களாகவும், பணம் ஏமாற்றியவனை மட்டும் மோசடிக்காரன் என்று சித்தரிப்பது அவலம்.
பல மாணவர்கள் வருடக்கணக்கில் படித்துத் தேர்வில் வெற்றி பெற்று வாங்கும் மருத்துவக்கல்லூரி இடத்தை தன்னிடம் பணமுள்ள காரணத்தால் இவர்கள் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அது நியாயமாகுமா?
முதலில் பணம் கொடுத்து மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக இடம் வாங்க நினைத்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணைத் தான் தண்டிக்க வேண்டும். அதன்பிறகு தான் பணம் ஏமாற்றிய பெண்ணை தண்டிக்க வேண்டும்.
ஆனால் பணம் இழந்தவர்கள் அப்பாவிகள் என்று சித்தரிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது தான் விளங்கவில்லை. இது மட்டுமல்லாது அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல இடங்களில் மோசடிகள்.
அங்கேயும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்படுவது என்பது, சரியான நபரிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கிக் கொள்வது உனது சாமர்த்தியம் என்று அரசாங்கமே மறைமுகமாகச் சொல்வது போல உள்ளது.
இந்த விதத்தில் மட்டுமா?
வங்கியை விட மூன்று மடங்கு வட்டி, ஒரு கிராம் நகையைக்கொடுத்தால் பத்து கிராம் தருகிறோம், மாதம் 2000 செலுத்தினால் ஒரு வருடம் கழித்து மாதாமாதம் 20000 தருவோம் என்று தினுசு தினுசாகப் பல்விதங்களிலும் ஏமாற்று மற்றும் மோசடி வேலைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இவையெல்லாம் மனிதனின் பேராசை காரணமாகவும், குறுக்கு வழியில் முன்னேறிவிடத் துடிப்பதன் காரணத்தாலும் மட்டுமே ஒழிய நேர்வழியில் வாழ நினைக்கும் யாருக்கும் எந்த சூழலிலும் அது மாதிரியான மோசடிகள் நிகழ்வது இல்லை.