Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அகமதாபாத் பரிதாபங்கள்-2

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் பண்பு.

ஆனால் அதைப் பின்பற்றி மீள் குடியேற்றம் செய்து சிறப்பாக வாழ்வது பெரும்பாலும், வட இந்தியர்கள் தான்.

அதாவது தமிழ் பேசாத பிறமொழி இந்தியர்கள்.
அவர்கள் இங்கே வந்து நமது ஊர் பாதுகாப்பானது , சுகாதாரமானது, நல்ல வேலை வாய்ப்பு வசதி உடையது என்பதை உணர்ந்துகொண்டு இங்கே தங்கி யாவரும் கேளிர், இதுவும் எனது ஊரே , இங்கேயே நான் குடியேறி, ரேஷன் வாங்கி வாக்களிக்கவும் செய்வேன் என்று இங்கேயே ஐக்கியமாகி விடுகிறார்கள்.

என்னடா இது, வேலைக்குனு வந்தா , வந்துட்டுப் போக வேண்டியது தானே, அதைவிடுத்து இங்கேயே தங்கி விடுகிறார்களே என்று நமக்கும் சந்தேகமில்லாமல் இல்லை.

அவர்கள் இங்கேயே தங்குவதற்கும் காரணமில்லாமலும் இல்லை.

நான் ஏற்கனவே முன்பு ஒரு முறை குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தொழில் நகரமான அகமாதாபாத் சென்றிருந்தபோது அங்கிருந்த தொழிற்பேட்டையின் அவலநிலை குறித்து எழுதியிருந்தேன்.
சாலையின் முக்கியமான சந்திப்புகளில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் ஒளி இல்லாமல் இருந்த அவல நிலை பற்றி எழுதியிருந்தேன்.

அமெரிக்க அதிபர் வந்திருந்தபோது பர்தா போட்டு மூடி வைக்கப்பட்டதன் காரணமும் அது தான்.

ஓரிரு நாட்களுக்கு முன்பு மீண்டும் அங்கே செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. விமான நிலையம் என்னவோ அதானி குழுமத்தின் பொறுப்பில் பளபளவென இருப்பது உண்மைதான்.
அதே போல, மிகப்பெரிய தங்கும் விடுதிகள் நல்ல வசதியுடன் அருமையான விதத்தில் இருக்கின்றன.

ஆனால் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

விமான நிலையத்தில் இருந்து 25-35 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பிரதான பகிதிக்கு செல்லும் வழியிலேயே பல இடங்களில் சாலைகள் மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக, ஆங்காங்கே மழைநீர் தேங்கி வாகனங்கள் இயக்குவதற்கு மிக சிரமமான நிலையில் இருந்தன.

சென்னையில் அது மாதிரி மோசமான சாலையைக் காண்பது மிக அரிது.
சமீப காலத்தில் பல்லாவரம் முதல் பம்மல் வரையிலான சாலை மட்டுமே, பராமரிப்பு மற்றும் மற்ற வேலைகளின் காரணமாகப் பழுதாகி மோசமான நிலையில் இருந்ததை நான் கவனித்திருக்கிறேன்
ஆனால் அங்கே செயல்பாட்டில் இருக்கும் சாலைகளில் பல இடங்கள் , பழுதான சாலையை விட மோசமான நிலையில் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் தான்.

மேலும் அங்கிருந்த சந்தைகளில் இறங்கி நடந்த போது சேறும் சகதியும் இல்லாத பகுதியே குறைவு.

நாங்கள் விமான நிலையம் சென்ற வழியில் நகரின் பிரதான சாலையில் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் ஒரு மகிழுந்து சிக்கியிருந்தது உச்சகட்டம்.

நம்ம தமிழ்நாட்டில், மாநில நெடுஞ்சாலைகள் , ஏன் ஊரக சாலைகள் கூட அவ்வளவு மோசமாக இல்லை.

அகமதாபாத் நகரின் பிரதான சாலைகள் நம்ம தமிழ்நாட்டின் பத்து பதினைந்து வருடத்திற்குப் முந்தைய சாலைகள் போலத்தான் இன்றளவிலும் இருக்கின்றன.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இன்றளவிலும் கூட ,அவ்வளவு பெரிய தொழில் நகரில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பயணிக்கும் போது சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல் என வயல்வெளிகளைக் காண இயன்றது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.