நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர்.
இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.
அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை.
பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என அசால்ட்டாக கையிலெடுத்து அலேக்காக அவற்றை சிதறடித்தும் விட்டார்கள்.
அதிலும் குறிப்பாக இளம் இராணுவ வீரர் அபிஷேக் ஷர்மா தான் ஒரு புலி என்பதை நிரூபித்து விட்டார்.
இவரை நோக்கி வந்த பல குண்டுகளை எதிரியின் கூடாரத்துக்கே திருப்பி எறிந்து மிரளச் செய்தார்.
இப்படியாக நல்லபடியாக முடிந்த இந்தப் போரில் இந்தியாவின் கை ஓங்கியது.
இப்படியாகத்தான் வர்ணிக்கப்பட வேண்டும், இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி.
ஒலிம்பிக், காமன்வெல்த், உலகக்கோப்பை விளையாட்டுகள் இவையெல்லாம் இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்யப்பட்னு ஏன் விளையாடப்படுகிறது?
மனிதனுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாமலா?
கேவலம் பிற காரணங்களுக்காக சண்டையிட்டு மாளும் நாடுகளுக்கு மத்திநில் விளையாட்டு என்ற இந்த ஒரு விஷயம் ஒரு இணைப்புப் பாலமாக அன்பின் பரிமாற்றமாகத் திகழும் என்பதற்காகத்தானே?
முன்னாள் இந்தியத் தடகள வீரர் மில்கா சிங் அவர்களுக்கு பறக்கும் சீக்கியர் என்ற பட்டம் பாகிஸ்தான் பிரதமரால் அளிக்கப்பட்டது என்பதை நாம் மறந்து விட்டோமல்லவா?
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில தீவிரவாதிகள் இந்தியர்களைக் கொன்றார்கள், இந்தியா பதிலுக்கு பாகிஸ்தானின் தீவிர முகாம்களை சுட்டு வீழ்த்தியது..அவ்வளவு தானே?
அந்த நாட்டில் வாழும் அப்பாவி மக்களும், சாதாரன மக்களும், இந்திய கிரிக்கெட் வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களும் என்ன பாவம் செய்தார்கள்?
இந்திய அணி பாகிஸ்தான் அணியோடு மோதக்கூடாது என்று சில தற்குறி பதர்கள் வழக்குப் போட்டிருந்தது .
ஆனால் நீதிமன்ற தீர்ப்பு அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அந்த ஆட்டம் நிகழ்ந்தது .
ஆனால் பாகிஸ்தான் அணியோடு விளையாடி முடித்த நமது இந்திய அணி வீரர்கள் செய்திருப்பது அதைவின மோசமான முட்டாள் தனம்.
விரோதியைக் கூட நேருக்கு நேர் சந்திக்கும் சூழலில் ஒரு சின்ன புன்னகையோ அல்லது நல விசாரணையோ செய்யும் நமது பண்பாடு எங்கே போனது?
விளையாடி முடித்த பிறகு விளையாடிய எதிரணிக்கு கைகுலுக்க வேண்டும் என்பது விளையாட்டின் அடிப்படைப் பண்பு மற்றும் மனிதப்பண்பு.
இந்த அடிப்படைப் பண்பையும் மீறி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்காமல் வந்திருக்கும் செயல் மிக மோசமான அடிப்படை மனிதத் தன்மையற்ற செயல்.
சண்டை என்பது நாடுகளோடு இருந்தாலும் இது மாதிரியான விளையாட்டு தான் அந்த சண்டையைத் தீர்க்கும் பாலம்
ஆனால் இங்கேயும் அவர்கள் அதே பகையைப் பாராட்டுவதற்கு இப்படியான விளையாட்டு எதற்கு?
அதற்கு அவர்கள் விளையாடாமலே விட்டிருக்கலாமே?
ஒரு இந்தியக் குடிமகனாக நாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம்.
ஆனால் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு ,இரு அணிகள் மோதும் போட்டியில் பரஸ்பரம் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை.
அந்த விதிமுறையின் மீதான மரியாதைக்காவது அவர்கள் கை குலிக்கியிருக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையிலான பகையை சில தற்குறி மதவாத சக்திகள் ஊதிப் பெரிதாக்கி தனது அரசியல் ஆதாயத்திற்காக உபயோகித்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகின்றன.
அந்த தற்குறி போலி அரசியிலில் விளையாட்டு வீரர்களும் மழுங்கிப் போயிருப்பது அருவருப்பானது.
இது நமது பண்பாடும் அல்ல..பண்பும் அல்ல.
கேவலமான இந்தச் செயலை பெருமையாகப் பேசும் பத்திரிக்கைகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பகல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும் என்ன சம்பந்தம்?
எதை எதனோடு முடிப்பது?
இது மூடத்தனம்.
இனி இப்படி நிகழ்ந்தீல் இந்திய மக்கள் பலரும் இந்திய அணி மீது வெறுப்புக் கொள்ளும் சூழல் உருவாகும்.
ஒரு நாட்டின் இறையாண்மை என்பது இன்னொரு நாட்டு மக்களை அவமானப்படுவது அல்ல என்பதை இந்த தற்குறி இந்திய அணி உணர வேண்டும்.