ஒவ்வொரு அமாவாசையும் நமக்கு ஏதாவது ஒரு புது சங்கதியைத் தந்து கொண்டே இருக்கிறது.
சென்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் வாளியில் கொடுக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தோம்.
அதாவது தர்ப்பணம் என்பது மனநிறைவுடன் , மரியாதைக்காக பெரியவர்களை நினைத்துக் கொடுக்கப்படாமல், ஒரு பெயரளவிற்கு, நானும் கொடுக்கவில்லையே என்று பிறரைப் பார்த்து குற்ற உணர்ச்சியுடன், பத்தோடு பதினொன்றாக கொடுக்கப்படுவதை உணர்த்தியிருந்தோம்.
கிட்டத்தட்ட எனது நிலையும் அதுதான்.இந்த தர்ப்பண சமாச்சாரம் எல்லாம் சும்மா , நான் அதை செய்ய முடியாது என்று சொன்னால் வீட்டுப் பெரியவர்கள் சும்மா விடமாட்டார்கள்.
அது பாவம்பா , இறந்து போன ஆத்மாக்கள் பசியோட நம்மள தேடி வரும்.அதுகளுக்கு சோறு போடனும்னு சொல்வாங்க.
அவனவன் இருக்கும்போதே தாய் தகப்பனுக்கு சோறு போட மாட்றான், முதியோர் இல்லத்துல கொண்டு போய் விடுறான்..இதெல்லாம் செஞ்சுட்டு செத்ததுக்கு அப்புறம. அமாவாசைக்கு காக்காக்கு சோறு போடுறான், தர்ப்பணம் கொடுக்குறான்.
என்னாங்க சார் உங்க பழக்கவழக்கம்?
இன்னைக்கு கூத்து என்னனா , நான் தர்ப்பணம் கொடுக்க உக்காந்த ஐயரு 150 ரூ , கட்டணம்னு சொன்னாரு.
அதுக்கு ஒரு 4,5 பேரு பொங்கிட்டாங்க.
என்னாத்துக்கு 150 ரூ கேக்குறீங்க, எல்லா இடத்துலயும் 100 ரூ தானே வாங்குறாங்கனு அந்த ஐயர் கூட சண்டை.
நான் தெரியாம தான் கேக்குறேன், இந்த வாயாபாரம் அதிகமானதுக்கு யார் காரணம்?
நாம தானே?
எவனும் தர்ப்பணம் கொடுக்க வந்து வரிசையில நிக்காம, அவனவன் வீட்லயே சும்மா பெரியவங்க போட்டோவ கையெடுத்து கும்பிட்டு முடிஞ்சத வச்சு சாமிய கும்பிட்டுட்டு மனசார 4 இயாலதவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, அமாவாசை கணக்கு முடிஞ்சுது னு வேலையைப் பாத்துட்டு போனா இந்த ஐயருங்க இப்படி காசு கேப்பாங்களா?
நீங்கதானய்யா மந்திரம் சொல்லி ஐயர் கையால எள்ளு தண்திய கரச்சு சாக்கடையில ஊத்துனாதான் எங்க தாத்தா ஆத்மா சாந்தி அடையும், ஆத்தா ஆத்மா சாந்தி அடையும்னு சொல்லி சொல்லி இந்த வியாபாரத்த இந்தளவுக்கு ஆக்கி வச்சீங்க?
இப்ப வந்து குத்துது கொடையுதேனா?
கொடையாம என்ன செய்யும்?
ஐயர் ஒரு புறம்னா இந்த தர்ப்பண செட் னு சொல்லி 100 ரூ வாங்குறானே?
அதுல என்னங்க நியாயம் இருக்கு?
ஒரு தேங்காய்-25 ரூ.
பத்தி -10 ரூ.
சூடன்-2 ரூ.
வெற்றிலை பாக்கு-2 ரூ.
எள்- 5 ரூ. (சிறிதளவு)
வாழைப்பழம்-8 ரூ.
வாழை இலை- 6 ரூ.
பூ – 10 ரூ.
எப்படிப் பார்த்தாலும் 30-35 ரூ நமக்கு நஷ்டம்.
இப்படி நியாயமில்லாத வியாபாரமும், அதிகப்படியான ஐயர் தட்சணையும் கொடுத்து, மனதளவில் நிறைவில்லாமல் கடனே என்று வரிசையில் நின்று, நான் முன்னாடியே வந்துட்டேன், லைன்ல வாங்க என்று அருகிலிருப்பவர்களிடம் சண்டையிட்டு 4 ஸ்வாகாவுடன், அவன் தாத்தா பெயரைச் சொல்லும் போது, நம்ம அப்பா பெயரையும்,நம்ம தாத்தா பெயரைச்சொல்லும் போது அவன் பூட்டன் பெயரையும் மாத்தி மாத்தி சொல்லி ஒளப்பி நானும் தர்ப்பணம் கொடுத்து விட்டேன் என்று போலியாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பது சுத்த முட்டாள்தனம்.
வருடத்திற்கு 3 அமாவாசைக்கு செலவழிக்கப்படும் இந்த 500 ரூபாயில், அதே பெரியவர்கள் இறந்த தினத்தில் ஏதாவது இயலாதவர்களுக்கு ஒருவேளை உணவளித்து , புண்ணியத்தைத் தேடிக்கொள்வது சிறந்தது.
இந்த ஏமாற்றுக்கார வியாபாரிகளிடமும், ஏமாற்றுக்கார் ஐயர்களிடமும் சம்பிரதாயம் என்ற பெயரில் எத்தனை காலம் தான் ஏமாறப்போகிறோம்?
முதலில் நான் திருந்த வேண்டும்
மாற்றம் என்னிலிருந்து துவங்க வேண்டும்.
முயற்சிக்கப் போகிறேன்.
புரியாதவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யப் போகிறேன்.
நீங்களும் யோசிப்பது நல்லது.