Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி!

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி நேற்றைய இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி.

நடந்து வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோற்கவில்லை என்ற பெருமையுடன் வீறு நடை போடுகிறது.

வரப்போகும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் பாகிஸ்தானி அணிக்கு எதிரான போட்டியையும் வெற்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என்பநில் ஐயமில்லை.

ஆனால் இந்திய அணி வீரர்கள் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது.
இப்போதைய இந்திய அணி என்பது வீழ்த்தப்படவே முடியாத ஜாம்பவான் கிடையாது.
நாம் செய்யும் ஓரிரு தவறுகள் எதிரணி வெல்வதற்கு எளிதாக வழிவகுக்கும் என்பதற்கு உதாரணம் தான் இன்றைய இலங்கையுடனான ஆட்டம்.

இந்திய அணி பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, திலக் வர்மாவை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது போலத்தான் இத்தனை நாள் இருந்தது.

இடையிடையே சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, இன்று சஞ்சு சாம்சன் ஆகியோர் கைகொடுத்தார்களே ஒழிய அபிஷேக் சர்மா திலக் வர்மா போல பெரும்பாலான ஆட்டங்களில் சோபித்தவர்கள் யாருமில்லை.

அக்சர் படேல், சூரிய குமார் யாதவ் ஆட்டம் எடுபடவில்லை
சிவம் தூபேவின் ஆட்டம் , இவரை ஏன்டா எடுத்தார்கள் என்ற ரீதியில் உள்ளது.

பந்து வீச்சில் பும்ராவைக் கூட ஒரு நாள் பொளந்து விட்டார்கள் என்பது வருத்தம்.

ஹர்திக் பாண்டியா எப்படியாவது ஒரு விக்கெட்டை பவர் ப்ளேயில் எடுத்து விடுவது நல்ல ரகம்.

குல்தீப் யாதவை இன்று அடித்த அடி, அவர் மீதான நம்பிக்கையை சிதைத்து விட்டது.

வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் பந்துகள் எல்லாம் மதில்மேல் பூனை ரகம் தான்.

எப்போது பலத்த அடி வாங்கும் என்பதை கணிக்க முடியாது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுவதுபோல, இந்திய அணி பழைய 90 களின் ஆஸ்திரேலிய அணி போல ஜாம்பவான் எல்லாம் அல்ல.

பாகிஸ்தான் எங்களுக்கு போட்டியே கிடையாது என்று பேசியதெல்லாம் ஆணவப் பேச்சு.

அந்த ஆணவப் பேச்சுக்கு அடிக்கப்பட்ட ஆணி தான் இந்த இலங்கை ஆட்டம்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி முறையான பயிற்சியுடன் ஆணவத்தை விடுத்து, ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆட வேண்டும் என்பதற்காகவே இன்றைய ஆட்டம் நிகழ்ந்தது போல இருக்கிறது.

உண்மையிலேயே இவர்கள் இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமெனில் இறுதிப்போட்டியை முடித்த பிறகு பேசட்டும்.

வெல்வதற்கு முன்பு ஆணவப்பேச்சு பேசுவது இவரது வளர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

இருமுறை அடிபட்ட காயத்தோடு இருக்கும் அணிக்கு ஆக்ரோஷம் அதிகம் இருக்கும்.

அவர்களை வெல்ல நல்ல பயிற்சி தேவை.
நன்கு உழைத்து இறுதிப்போட்டியை வெல்ல வாழ்த்துகள்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.