படித்ததில் பிடித்தது!
வடக்கன் Sc@m செய்து கேள்விப்பட்டிருக்கிறோம்…
.
தமிழ்நாட்டின் ஒரு பெரிய மூன்றெழுத்து movie production கம்பெனி வடக்கனையே Sc@m பண்ணி விட்டு இருக்காங்க 🤣🤣🤣
.
1965 ஆம் வருடம் குழந்தைய மையப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு படம் வந்தது
.
அது தமிழில் நல்ல ஹிட்… எப்பொழுதுமே தமிழில் ஒரு படம் Hit டானால் அந்த தயாரிப்பு கம்பெனி அதே படத்தை மற்ற மொழிகளிலும் தயாரிப்பார்கள்
.
அப்படி தயாரிக்கும் பொழுது பெங்களூரில் ஒரு காஸ்ட்லி தியேட்டரில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்கிறார்கள்
.
ஆனால் அதைவிட ஒரு பெரிய படம் அந்த தியேட்டரில் புக் ஆனதும் அந்தத் திரையரங்க உரிமையாளர் இவர்களுக்கு போட்ட agreement டை
கிழித்து போட்டு உங்கள் படத்தில் பெரிய ஆர்டிஸ்ட் இல்லை Release செய்ய முடியாது என்று அசிங்கப்படுத்தி அனுப்புகிறான்
.
இவர்களும் பெரிய தயாரிப்பு கம்பெனி ஆச்சே ஈகோ டச் ஆக அதே ஊரில் ஒரு சின்ன திரையரங்கம் பணக்காரர்கள் யாரும் அந்த தியேட்டருக்கு வர மாட்டார்கள் அந்த தியேட்டர் உரிமையாளரிடம் பேசி நாங்களே எங்கள் செலவில் புதுப்பித்து தருகிறோம் என்று அந்த தியேட்டரை full renovation
செய்து ஹை கிளாஸ் தியேட்டராக மாற்றுகிறார்கள்… இப்பொழுது அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அங்கும் அந்தப் படம் நல்ல வரவேற்பை பெறுகிறது
.
அப்பொழுது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது மெட்ராஸில் எடுக்கும் எந்த படத்தையும் நம் ஊரில் ரிலீஸ் செய்யக்கூடாது என்ற ஒரு பெரிய அரசியல் கட்சி ஆர்டர் போட அந்த ஊரில் ஓடும் மெட்ராசில் இருந்து தயாரிக்கப்பட்ட மொத்த படங்களும் நிறுத்தப்படுகிறது… தமிழ்நாட்டில் இந்தி படம் ரிலீஸ் ஆனால்தான் எங்கள் ஊரில் மதராசில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமோ அல்லது இந்தி படமோ ரிலீஸ் ஆகும் என்று சொல்லிவிட்டனர்
.
ரிலீசான பத்து நாட்களிலேயே இந்த படம் நிறுத்தப்பட்டதும் இவர்களுக்கு பெரிய அதிர்ச்சி… காரணத்தை விசாரித்தால்… அன்று தமிழ்நாட்டில் வெடித்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான்
.
அந்த புரொடியூசரும் சென்னையில் வந்து கலைஞரிடம் பேசுகிறார் அண்ணாவிடம் பேசுகிறார் அவர்களோ எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகின்றனர்
.
அப்பொழுது கலைஞர் ஒரு ஐடியா கொடுக்கிறார் நீங்கள் இந்த IG யை போய் பாருங்கள்… அவர் உங்களுக்கு வழி ஏதேனும் சொல்லுவார் என்று சொல்லி அனுப்ப அந்த தயாரிப்பாளரும் அந்த IGஐ வந்து சந்திக்கிறார் அவரும் இந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்கிறார்
.
ஆவடியில் ஒரு திரையரங்கம் உள்ளது அங்கு மட்டும் ஒரே ஒரு ஷோ ஒரு இந்தி படத்தை ரிலீஸ் செய்யுங்கள் ஆவடியில் உள்ள இரும்பு டேங்க் தொழிற்சாலையில் நிறைய Hindhi தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் அவர்களை அழைத்த அந்த படத்தை போட்டு காண்பியுங்கள் என்று மேற்கொண்டு ஒரு ஐடியாவை சொல்லி அனுப்ப இவர்களும் அதே போல் செய்கின்றனர் அது மட்டுமல்ல அந்த தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று காண்பிக்க அப்பொழுது உள்ள ஸ்டண்ட் கலைஞர்களையும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கலையும் அந்த தியேட்டரில் நிரப்புகின்றனர் இந்தி தெரிந்த சிலர் அந்த தியேட்டரில் இருப்பார்கள் எந்த காட்சிக்கு சிரிக்க வேண்டுமோ அவர்கள் சிரிப்பார்கள் அந்த சத்தத்தை கேட்டு மத்த அனைவரும் சிரிக்க வேண்டும் எந்த காட்சிகள் கைதட்ட வேண்டுமோ அவர்கள் கைதட்டுவார்கள் அதை பார்த்து மற்றவர்களும் கைதட்ட வேண்டும் என்று முன்கூட்டியே instruction கொடுக்கப்பட்டு… அனைத்தும் ரெடி தமிழ்நாட்டில் உள்ள ஹிந்தி பத்திரிக்கையாளர்களும் அந்த தியேட்டருக்கு அழைக்கப்படுகின்றனர்… இவர்கள் பிளான் போட்டது போல் அனைத்தும் நடக்கிறது சிரிக்க வேண்டிய இடத்தில் தியேட்டரே சிரிக்கிறது கைதட்ட வேண்டிய இடத்தில் அனைவரும் கைதட்டுகின்றனர்
.
இதைப் பார்த்த பத்திகையாளர்களோ தமிழ்நாட்டில் இந்தி படங்கள் release செய்து நன்றாக ஓடுகிறது.. என்று அந்த தியேட்டரில் எடுத்த போட்டோ உடன் எழுத வடநாட்டில் அந்த பத்திரிக்கையை படித்த அரசியல் கட்சிக்காரர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் ஊரில் நம் படங்களை ரிலீஸ் செய்கின்றனர்
.
முடங்கிப் போன இவர்கள் படமும் ரிலீஸ் ஆகிறது பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடுகிறது
.
அடேய் வடக்கனாவது விவரம் தெரியாத நம்மூர் காரணத்தான்டா ஏமாத்துறான்.. ஆனா நம்ம ஊரு காரன் அங்க இருக்குற ஒட்டுமொத்த அரசியல் கட்சிக்காரனோட சேர்த்து மொத்த ஊரையே ஏமாற்றி இருக்கானுங்க டா 🤣🤣🤣
.
அது என்ன படம் யார் அந்த தயாரிப்பாளர் என்று உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்