Spoiler Alert
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் கருத்தாழமிக்க, வலிகளை உணர்த்தும் பைசன் படம் பற்றிய விமர்சனத்தைக் கண்டோம்.
மேலும் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன்
அவற்றுள் ஒன்று இளைஞர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டியூட் திரைப்படம்.
கோமாளி, லவ் டுடே பட இயக்குனரும், பிரபல நடிகருமான பிரதீப் ரங்கநாதனும், சரத்குமார் அவர்களும், அவரது மகள் மமிதா பைஜூ கதாநாயகியுமாக நடித்து வெளியான இந்தப்படம் என்ன சொல்கிறது இளைஞர்களுக்கு?
பார்க்கலாம்.
மதம் கடவுளின் பெயரைச் சொல்லி சில சாமியார்கள் சல்லாபத்தில் ஈடுபடுவதையும், பிரபல சாமியார் ஒருவர் ஒரு பிரபல நடிகையோடு இரவு பூஜை செய்த காட்சிகளையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்.
அதே பாணியில் , காதல் புனிதமானது , காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லி ஒரு சல்லாப நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் இந்த இயக்குனர்.
B கிரேடு கவர்ச்சிப் படங்களில் கூட என் புருஷன் வீட்டுல இல்ல என்று சொல்லித்தான் வேறொருவருடன் உல்லாச சல்லாபங்கள் அரங்கேறுவதாகக் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.ஆனால் இந்தப் படத்தில் என் புருஷன் வீட்ல தான் இருக்கான், ஆனா அவன் ஒன்னும் சொல்ல மாட்டான், நம்மளோட புனிதக் காதலை அவன் புரிஞ்சிக்கிட்டான், நீ வா நாம காதோல் பண்ணுவோம்னு பண்ணியிருக்காங்க.
கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது மட்டுமே மனதிற்கு ஆறுதல்.
சரி கதைக்கு வரலாம்.
அந்தக் கருதமத்தை வேறு விளக்க வேண்டியிருக்கிறது என்பது வருத்தம் தான்.
சரத்குமார் – பால்வளத்துறை அமைச்சர், அவரது மகள் மமிதா பைஜூ, மருமகன் ( அதாவது சரத்குமாரின் தங்கை மகன்) பிரதீப்.
இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.
அவன் மடியில் தான் இவளுக்கு மொட்டை போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பாயிண்ட்டா என்று கடிந்து கொள்ள வேண்டாம்.
இதைத் தான் சென்டிமென்டாக காண்பித்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பிரதீப் மீது பைஜூவுக்குக் காதல் வர , பிரதீப் அதை மறுத்து நான் உன்னிடம் அப்படி நினைத்துப் பழகவில்லை என்று கூற , அவர் இவரை விட்டுப் பிரிந்து மேல்படிப்புக்காக வெளியூர் சென்று விடுவார்.
எப்படியும் அங்கே போனவுடன் இவரை நினைத்து உருகி கதாநாயகன் இவரை காதலித்து விடுவார், அவரும் கதாநாயகனை மறந்து வேறுயாரையாவது காதலித்து விடுவார் என்ற நமது எதிர்பார்ப்பு அப்படியே நிகழ்கிறது.
ஆனால் எதிர்பாரா விதமாக கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் திருமண ஏற்பாடுகள் நிகழ, கதாநாயகி தூக்கில் தொங்கும் அளவிற்குப் போக, கதாநாயகன் அறிவுரைப்படி கதாநாயகி சரத்குமாரிடம் தனது காதலைப் பற்றி சொல்ல, அவரோ தான் தான் தனது இன்னொரு தங்கையை ஆணவக் கொலை செய்தேன் , காதல் கீதல் என்று சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்ட, சும்மா ஏமாற்றினோம் என்று சமாளித்து திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது.
அந்தத் திருமணத்திற்கு இவளது காதலனும் வர, இருவரையும் வீட்டை விட்டு அனுப்ப முயற்சிகள் நடந்து எங்கே போனாலும் வாழ முடியாது, என்று உணர்கிறார்கள்.
சரி காதலுக்காக தூக்கில் தொங்கச் சென்றாளே உன்னத காதலி, அதனால் இந்த ஜோடி தற்கொலை செய்து கொள்ளும் அல்லது பிரதீப் சண்டையிட்டு போராடி இந்த ஜோடியை சேர்த்து வைப்பார் என்று வழக்கமான கதையை யோசித்த நமக்கெல்லால் ஒரு சூப்பு.
தரமான 2k கிட்ஸ் வகையைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் காதலன், பரிதீப்பிடம் வந்து ,அண்ணா அவள நீங்க தாலி கட்டி பொண்டாட்டியா ஆக்கிருங்க, சிச்சுவேஷன் சரியாகுற வரை நான் அப்பப்ப வந்து லவ் பண்ணிக்கிறேன், அப்புறமா நாங்க ஓடிப்போயிடுறோம்னு ஒரு உன்னதமான யோசனை சொல்ல, மாமன் மகளின் தவிப்பைக் கண்ட பிரதீப் அந்த உன்னதமான , புனிதமான காதலைக் காப்பாற்ற இந்த தியாகத்தை செய்யத் துணிகிறார்.
ஏன்டா இதெல்லாம் ஒரு யோசனையா உனக்கு வெட்கம் மானம் ரோஷம்லாம் இல்லையா என பிரதீப்பின் நண்பர் கேட்க, இதுக்கு நான் ஏன்டா வெட்கப்படனும், இந்த 2025 லயும் காலிச்சா வெட்டுவேனு சொல்ற அவ அப்பன் தான் வெட்கப்படனும்னு கருத்து ஊசி போட்டுட்டு தாலிய கட்டி டம்மி புருஷனா ஆயிடுறாரு.
பிரதீப் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரது மனைவியின் காதலன் அவளோடு குடும்பம் நடத்தி குழந்தையும் உருவாகி விடுகிறதாம்..
தனது மாமன் மகளை எப்படி சிறுவயதில் பார்த்துக் கொண்டாரோ அதேபோல தனது மாமன் மகளின் உன்னத காதலனுக்குப் பிறந்த குழந்தையையும் அன்பாக கவனித்துக் கொள்கிறார்.
அவரது மாமன் மகள் அவள் காதலனோடு உல்லாசமாக காதல் லீலைகள் செய்கிறார்.
சரி இந்தக் கருமத்த எங்க கொண்டு போயி எப்படி முடிப்பாங்கனு பாக்குற நம்மள கடுப்பேத்தி, ஆணவக் கொலை அப்பா திருந்தி நல்லவனாக மாறிட்டாரு என்ற பழைந க்ரிஞ்சு க்ளைமாக்ஸ் வைத்து ஒருவழியாக முடித்து விட்டார்கள்.
படம் நல்லா இல்லை கதை ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை என்று சொல்பவர்களை பூமர்,90 கிட்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
ஏன் எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை என்றால் எங்களுக்கெல்லாம் மான ரோஷம் இருக்கு, தட்டுல சோறு போட்டு தான் சாப்புடுறோம்னு நம்மாளுங்க ஒரு பக்கம் பதில் சொல்ல, ப்ரோ சில் ப்ரோ, இட்ஸ் ஆல் இன்தி கேம், அவன் பொண்டாட்டி கூட இவன் குடும்பம் நடத்தினா தப்பா, அதான் கோர்ட்டே சொல்லிருச்சுல என்று ஒரு கூட்டம் போராட..
படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
நாம் முன்பு சொன்னது
போல, கவர்ச்சி கசமுச காட்சிகள் இல்லை என்பது மன ஆறுதல்.
இந்தப்படத்தின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இங்கே பெரும்பாலானோர்க்கு இல்லை.
இயக்குனரின் தொலைநோக்குப் பார்வையைக் கண்டு வியக்கிறோம்.


