என் அருமைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வணக்கங்கள்.
என் பெயர் கபிலன்.கபிலர் என்று தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவன்.
தோராயமாக தமிழ் படித்தவர்கள் திடுக்கென குழம்பலாம், கம்பனா? கபிலனா?
நமக்குக் கம்பர் தானே தெரியும்?
இவர் யார் கபிலர் என்று.
என்னை நினைவுபடுத்ததத்தான் இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன்.
நான் குறிஞ்சித் திணையில் கவி பாடுவதில் பெயர் பெற்றவன்.
குறிஞ்சித் திணை என்பது நினைவிருக்கிறது தானே?
மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது.
அதென்னப்பா ஓரவஞ்சணை?
மற்ற நிலங்களான, முல்லை , மருதம் , நெய்தல் , பாலை பற்றியெல்லாம் ஏன் கவிபாடவில்லை என்று கேட்கிறீர்களா?
ம்ம்ம்.. அதற்கும் காரணமில்லாமல் இல்லை.
எனது உற்ற நண்பன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன்.
அவனையும் அவன் சார்ந்த திணையையும் பாடாமல் எப்படி?
அதனால் தான் அதையே எனது முழுமுதற் பணியாக்கிக் கொண்டேன்.
சங்க இலக்கியங்களில் மிக அதிக எண்ணிக்கையில் பாடல் பாடிய பெருமை என்னையே சாரும்.
கலித்தொகை, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய இலக்கியங்களில் எனது பாடல்கள் முதன்மையானவை.
பொய்யாநாவிற்கபிலர் என்ற புகழை உடையவன்.
குறிஞ்சி நிலத்தில் பூக்கும் 99 பூக்களைப் பற்றியும், 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ பற்றியும் பாடல்களைப் பாடியிருக்கிறேன்
சங்கத்தில் தமிழ் வளர்த்த, கவிஞர்களில் முக்கியமானவர்களில் நானும் ஒருவன்.
என்னை ஒருமுறை எனது தமிழ்ச் சொந்தங்களிடையே நினைபடுத்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க வளமுடன்!



